ஏதாவது ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தால் அந்த சம்பவத்தை கதைக்கருவாக வைத்து படமெடுப்பதில் தமிழ்சினிமாக்காரர்களை மிஞ்சவே முடியாது என்பதற்கு இன்னொரு உதாரணம் கிடைத்து விட்டது.
சென்னை நகரை கடந்த சில நாட்களாக மர்ம நகராக மாற்றியிருக்கும் சைக்கோ மனிதனின் கதையை திரைப்படமாக எடுக்க ரங்கீலா என்டர்பிரைசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருகிறது. ஆக்ரா என்ற கிளுகிளுப்பான படத்தை இயக்கிய டைரக்டர் பி.சித்திரை செல்வன்தான் சைக்கோ படத்தையும் இயக்கவுள்ளார். பாலு என்பவர் திரைக்கதை வசனம் எழுதுகிறார். சைக்கோ என்ற வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இப்புதிய படத்துக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அடுத்த மாதத்துக்குள் சூட்டிங் தொடங்கப்படும் என்று ரங்கீலா என்டர்பிரைசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்புதிய படத்தை தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை நகரில் தற்போது நடந்து வரும் மர்மங்களையும் இரவு நேரங்களில் சென்று பார்வையிட்டு வருகிறாராம் டைரக்டர் சித்திரை செல்வன். (பார்த்து சார்... எதையாவது உத்து பார்த்தால் சைக்கோன்னு நெனச்சு பொதுமக்கள் அடிச்சி போட்டுடுராங்களாம். போலீசும் அத கை கட்டி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க.)
2008-07-22
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!