CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-10

Kisu kisu : அவதார இயக்குனரை மிரட்டும் ரம்ய நடிகை

அந்த ரம்யமான நடிகை நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் மையம் கொண்டிருந்த என்றே சொல்லலாம். பீல்டு அவுட் ஆகும் நேரத்தில் சூப்பர் நடிகரின் எதிரியாக ஒரு படத்தில் நடித்து, புதிதாக வரும் நடிகைகளுக்கெல்லாம் ரோல் மாடல் ஆண்ட்டியாகி விட்டார். ரம்யத்துக்கு அந்த படத்தில் தமிழ் சினிமா உலகமே ஆச்சர்யப்படும் அளவுக்கு அப்படியரு கேரக்டர் அமைந்ததற்கு காரணமே அந்த படத்தின் இயக்குனர்தான். படம் பூஜை போட்டபோது முதலில் அந்த கேரக்டரில் நடிக்க குஷ்புவைத்தான் சூப்பர் நடிகர் சிபாரிசு செய்ததும், பின்னர் ரம்யம் அழைக்கப்பட்டதும் அப்போதைய கிசுகிசு.

இப்போது அந்த இயக்குனர் அவதார இயக்குனராகி விட்டார். உலக நாயகனுடன் ஒர்க் பண்ணிய குஷியில் இருக்கும் அவதார இயக்குனரின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது ரம்யத்தின் ரீ&எண்ட்ரி. முருகப்பெருமானின் பெயர்கொண்ட ஒரு படத்தில் ரம்யம் ரீ&எண்ட்ரி கொடுக்கிறது. அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

ஆரம்பகாலத்தில் இவர்கள் இருவரும் பாசப்பிணைப்போடுதான் இருந்தார்கள். ரம்யமோ கல்யாணம் ஆகாத கன்னி(!), அதனால் பிரச்னை இல்லை. அவதார இயக்குனரும் மனைவிக்கு தெரியாமல், சூட்டிங் லொகேஷன் என்று ரம்யத்தை சுற்றிச் சுற்றியே மையம் கொண்டிருக்கிறார். அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். கல்யாணம் முடிக்காமல் கணவன், மனைவி போல வாழ்ந்திருக்கிறார்கள். (இதுபற்றி அப்போதே குமுதம் புத்தகத்தில் கிசுகிசு எழுதப்பட்டிருக்கிறது).

இப்போது ரீ&எண்ட்ரி கொடுக்கும் நடிகை, அவதார இயக்குனர் அடுத்து எடுக்கும் படத்தில் தனக்கு முக்கிய கேரக்டரை ஒதுக்க வேண்டும். அல்லது 50 லட்சம் பணம் தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். அவதாரம் மறுத்ததால், இவ்வளவு நாள் பணம் கொடுத்துட்டா என்னிடம் வந்தாய்? என்று பச்சையாகவே கேட்டு விட்டாராம். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் அவதார இயக்குனர்.

4 comments:

Samuthra Senthil said...

இந்த கிசுகிசு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

RamyaKrishnan (or vamsi) & K.S.Ravikumar

Anonymous said...

ramya krushnanna pathi thappa eluthuna..........

Ennala unkala onnume seiya mudiyathe?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நீங்கள் குமுதத்தில் வேலை பார்ப்பது இந்த செய்தி மூலம் நிருபணம் ஆகிவிட்டது !
சரியா நிருபரே !,
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!