2008-07-15
சிம்பு படத்தில் நயன்தாரா வாழ்க்கை வரலாறு : EXCLUSIVE தகவல்கள்
நடிகர் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள திரு போடா திருமதி போடி படத்தில் நயன்தாராவுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம்பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நடிகை நயன்தாரா சிம்பு மீது கோபத்தில் இருக்கிறார்.
ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் திரு போடா திருமதி போடி. சிம்புவின் நண்பர் விக்கி என்ற விக்னேஷ் சிவா இந்த படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. கனடாவில் அதிக அளவிலான காட்சிகள் இடம்பெறவிருப்பதால் போடா போடி குழுவினர் கனடா சென்றுள்ளனர். அங்கு தொடர்ந்து 2 மாதங்கள் சூட்டிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போடா போடி படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் கதைப்படி நாயகியாக வரும் வரலட்சுமிக்கு டான்ஸ் என்றால் உயிர். அவர் நடனம் பயிலும்போது சக ஆண் நண்பர்களுடன் நன்றாக ஊர் சுற்றுவார். கட்டிப்பிடித்து ஆட்டம் போடுவார். ஜாலியாக பொழுதை போக்குவார். நாயகியின் இந்த நடத்தை பிடிக்காத நாயகன் சிம்பு, எப்படியாவது நாயகியை திருத்தி விட வேண்டும் என்று மெனக்கெடுகிறார். ஆனால் அவரும் திருந்தியபாடில்லை. இதையடுத்து ஒரு வித்தியாசமான (?) திட்டத்தை தீட்டுகிறாராம். நாயகியை திருத்துவதற்காக தானும் பிற பெண்களுடன் நெருங்கி பழகுகிறார். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆடிப்பாடுகிறார். இதையடுத்து நாயகிக்கு வயிற்றெரிச்சல் அதிகமாகிறது. கடைசியில் அவர் திருந்துகிறாரா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸாம்.
இந்த கதை நயன்தாராவின் சொந்த விவகாரங்களை சார்ந்துள்ளதாக இருக்கும் என்று போடா போடி படக்குழுவை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். சிம்புவின் நண்பர்தான் படத்தின் இயக்குனர். சிம்பு சொல்வதை கேட்டு இப்படியரு படத்தை எடுக்கிறார்கள். என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை என்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இதுபற்றிய தகவல் நயன்தாராவின் காதுகளுக்கு எட்ட... ஏக கடுப்பில் இருக்கிறாராம். நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றாலும், இவன் விட மாட்டான் போலிருக்கிறதே... என்று புலம்புகிறாராம்.
கொசுறு சினி டேட்டா : நயன்தாராவுக்கும், சிம்புக்கும் இடையிலான காதல் முறிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, அவர் உச்ச நடிகருடன் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்ததுதான் என்று ஏற்கனவே கிசுகிசு பரவியது. அதேபோல சிம்புவை வெறுப்பேற்றுவதற்காகவே பில்லா படத்தில் நயன்தாரா டூ பீஸ் உடையில் தோன்றி நடித்தார் என்றும கிசுகிசுக்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
Nayanthara,
simbhu
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
அடப்பாவமே அப்டியா சங்கதி? இவனுக்கு வம்புன்னே பேரு வெச்சிருக்கலாம்.
neenka unmayeeleye cinema nirubara???????
//அடப்பாவமே அப்டியா சங்கதி? இவனுக்கு வம்புன்னே பேரு வெச்சிருக்கலாம்.//
இதில இவன் என்னு சொல்லுறது என்னை இல்லையே??
//அதேபோல சிம்புவை வெறுப்பேற்றுவதற்காகவே பில்லா படத்தில் நயன்தாரா டூ பீஸ் உடையில் தோன்றி நடித்தார் என்றும கிசுகிசுக்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.//
இருவரும் சேர்ந்து செய்த ஊசிப்போன ஊறுகாய் பலருக்கு போதையாகிப் போச்சா ?
:)
இவற்றின் மூலம் உண்மையை மறைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது...........??
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!