
நடிகை மாளவிகா செக்ஸ் டார்ச்சர் புகார் கூறிய விவகாரத்தில் கார்த்தீகை பட தயாரிப்பாளர் திடீர் மனமாற்றம் அடைந்துள்ளார்.
கார்த்தீகை பட சூட்டிங்கின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பட அதிபர் ஆஞ்சநேயலு மீது நடிகை மாளவிகா செக்ஸ் டார்ச்சர் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்று மும்பைக்கு பறந்த நடிகை, பின்னர் குழந்தை பிறந்த பிறகுதான் கார்த்தீகை படத்தில் நடிப்பேன் என்று கூறினார்.
இதையடுத்து படத்தில் நடிக்காவிட்டால் மாளவிகா மீது ரூ.75 லட்சம் நஷ்டஈடு கேட்டு 2 வழக்கு போடுவேன் என்று ஆஞ்சநேயலு மிரட்டல் விடுத்தார். கெடுவும் விதித்து பார்த்தார். ஆனால் மாளவிகா அதற்கெல்லாம் கவலைப்படாமல், வழக்கு போட்டால் சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று பதிலளித்தார்.
இந்நிலையில் மாளவிகா மீது வழக்கு போடும் முடிவை பட அதிபர் ஆஞ்சநேயலு கைவிட்டு விட்டாராம். இதனை உறுதி செய்த கார்த்தீகை பட டைரக்டர் வீரா, மாளவிகாவுக்கு பதில் நமீதாவை நடிக்க வைக்கவிருந்தோம். சில பிரச்னைகள் காரணமாக அவர் நடிக்கவில்லை என்றார்.
படஅதிபரின் மனமாற்றத்துக்கும், நமீதா நடிக்காததற்கு காரணம் என்ன என்று விசாரிக்கையில். பயம்தான் காரணம் என தெரியவந்துள்ளது. மாளவிகா கோர்ட்டில் போய் தயாரிப்பாளர் டார்ச்சர் செய்தது உண்மை என்று சொன்னால் நமக்கு தண்டனை கிடைத்து விடுமோ என்று ஆஞ்சநேயலு அஞ்சுகிறாராம். அதே நேரத்தில் மாளவிகாவுக்கு நமீதா தடாலடி பதில் கொடுத்துள்ளதால், அவர்களுக்குள் சண்டை வந்து, கோர்ட், கேஸ் என்றாகி படப்பிடிப்புக்கு ஏதும் கோர்ட் தடை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியரு மனமாற்றம் என்கிறது கோலிவுட் வட்டார தகவல்கள்.
7 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
மாளவிகாவுக்கும் உங்களுக்கும் வேற வேலையே இல்லியா சினிமா நிருபர்?
தலைவி மாளவிகாவ யாரலும் அசச்சிக்க... முடியாது அசச்சிக்க முடியாது.
//PUTHUMAI PITHAN said...
மாளவிகாவுக்கும் உங்களுக்கும் வேற வேலையே இல்லியா சினிமா நிருபர்?//
நிருபருக்கு வேலையே இதுதானய்யா?
// PUTHUMAI PITHAN said...
மாளவிகாவுக்கும் உங்களுக்கும் வேற வேலையே இல்லியா சினிமா நிருபர்?//
ஹா ஹா ஹா ஹா ஹா
என்னையும் சேர்த்துக்குங்க :-))))
பின்னூட்டமிட்ட புதுமை பித்தன், சுதா, கிரிக்கு நன்றி...!
//கிரி said...
// PUTHUMAI PITHAN said...
மாளவிகாவுக்கும் உங்களுக்கும் வேற வேலையே இல்லியா சினிமா நிருபர்?//
ஹா ஹா ஹா ஹா ஹா
என்னையும் சேர்த்துக்குங்க :-))))//
:-)))))))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!