kuselan rajini kuselan rajini kuselan rajini kuselan rajini
மலையாளத்தில் வெளியான கத பறயும் போல என்ற படம் தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் குசேலடு என்ற பெயரியும் எடுக்கப்பட்டுள்ளதுபோல இந்தியில் பில்லோ பார்பர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஷாரூக் கான்தான் சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்து வருகிறார்.தமிழிலும், தெலுங்கிலும் குசேலனை எடுத்துள்ள குசேலன் குழுவினர், இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். குசேலன் ஆகஸ்ட் 1ம் தேதி உலகமெங்கிலும் ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் இந்தி டப்பிங் குசேலனையும் வெளியிடத் தயாராகி வருகிறார்கள். இந்த செய்தியை அறிந்த ஷாரூக் கான் ரொம்பவே கலங்கி விட்டாராம். டப்பிங் குசேலன் வந்தால் ரீமேக் குசேலனின் (பில்லோ பார்பர்) கதி என்னவாகும் ன நினைத்து வருந்திய அவர் ரஜினியிடம் போன் செய்து, தங்களது படத்தை இப்போது வெளியிட்டால், எனது பில்லோ பார்பர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போகும். தயவு செய்து பில்லோ பார்பரை வெளியிட்ட பிறகு வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.
சரி... இதுபற்றி யோசித்து விட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்த ரஜினிகாந்த், அடுத்த சில நிமிடங்களில் ஷாரூக்கிற்கு போன் செய்து நீங்கள் சொன்னபடியே செய்கிறேன், என கூறி விட்டாராம். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஷாரூக், ரஜினியின் புகழ்பாடத் தொடங்கியிருக்கிறார். ரஜினி சார்தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று அவர் மும்பையில் வெளியாகும் பத்திரிகையன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார்.
மேலும் பில்லோ பார்பர் படத்தின் ஒரு காட்சியில் ஷாரூக்கானும், ரஜினிகாந்தும் சந்திப்பது போன்ற காட்சியை எடுத்த முடிவு செய்துள்ள ஷாரூக், அதுபற்றியும் ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இன்னும் பாசிட்டிவான பதில் வரவில்லை என்கிறார் ஷாரூக்.
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
சும்மாவே தாங்க முடியாது.. இப்பயெல்லாம் போட்டா .....
வட இந்திய நடிகர்களுக்கு தென் இந்தியர்கள் என்றால் இப்போதும் நக்கல் தான்..இது அவர்களுடைய!!! இந்திய!!! திரைப்பட விழாவிலும் தெரிந்தது.
பாவம் புண்ணியம் பார்க்காம போட்டு வாங்கணும் இவங்களை...ரஜினிக்கு ஊடகங்கள் அங்கே பெரும் வரவேற்ப்பு இருப்பது போல காட்டி வருகின்றன. இதுவும் உண்மையா என்று இதன் மூலம் தெரிந்து விடும். இருந்தால் (அனைவரும்) காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் இல்லை என்றால் வாயை மூடிட்டு (ரசிகர்கள்)இருந்துக்கலாம்
பின்னூட்டத்துக்கு நன்றி கிரி...!
அப்போ இந்தியில இவரோட குசேலன ரிலீஸ் பண்ணப்போறவங்க கதி என்னவாம்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!