CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-03

திருமண வதந்தியால் நடிகை டென்ஷன்


ஓராண்டுகளுக்கு முன்பு நடிகர் சேரனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர் இப்போது டென்ஷனாக இருக்கிறார். இதற்கு காரணம் அவருக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று வதந்தி கிளம்பியதுதானாம்.

மாயக்கண்ணாடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ரசிக்கும் சீமானே என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் நடித்து முடித்துள்ளார். மேலும் டைரக்டர் மீரா கதிரவன் இயக்கத்தில் அவள் பேர் தமிழரசி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆட்டோகிராப் பார்ட் 2 படத்திலும் நவ்யா நாயர் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நவ்யாவுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்கிற தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் பட வாய்ப்புகள் பாதிக்கின்றனவாம். இதுபற்றி நவ்யாவிடம் கேட்டதற்கு, பொறிந்து தள்ளிவிட்டார். நான் இப்போதைக்கு கல்யாணம் செய்வதாய் இல்லை. எனக்கு வேண்டாதவர்கள்தான் இப்படி வதந்தியை கிளப்பி விடுகிறார்கள், என்றார். உங்களுக்கு வேண்டாதவர்கள் யார் என்று கேட்டால், அதுபற்றி சொல்ல முடியாது. சினிமா உலகில் எனக்கு வேண்டாதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்றார்.

3 comments:

Samuthra Senthil said...

உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

நவ்யாவுக்கு கல்யாணம் ஆயிட்டுன்னு ஏற்கனவே செய்தி வந்துச்சே. அப்போ அது பொய்யா?

கிரி said...

//மாயக்கண்ணாடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர்//

அதற்க்கு முன்னாலேயே..பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் எதோ படம் நடித்து இருக்காங்க

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!