
கவர்ச்சியான மாடலிங் படங்களை பார்த்து நடிகை ஒருவர் அலறியடித்து ஓடியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... காதல் நடிகை என்று செல்லமாக அழைக்கப்படும் சந்தியாதான்.
தற்போது அவர் மஞ்சள்வெயில், மகேஷ் சரன்யா மற்றும் பலர், புதுமுகம் பரிமளுடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராஜாதி ராஜா படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் நாயகன் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ். படத்தில் சந்தியாவை தவிர மேலும் 5 நாயகிகளும் இடம்பெறுகிறார்கள்.
இந்த படத்தின் போட்டோ செஷனுக்கு தயாராகுமாறு சந்தியாவுக்கு படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டோ செஷனில் அணிய வேண்டிய டிரஸ் என்ன என்று சந்தியா தரப்பு கேட்க... சில மாடல் அழகிகளின் போட்டோவை அனுப்பி... இதில் இருப்பதுபோல டிரஸ் போட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அந்த படங்களை பார்த்ததும் சந்தியா அதிர்ச்சியடைந்து விட்டாராம். இதற்கு காரணம் படத்தில் இருந்த மாடல்கள் அனைவரும் அரைகுறையாக ஆடையணிந்திருந்தனர். இதனால் இப்படிமெல்லாம் தன்னால் அசிங்கமான டிரஸ் போட்டு போஸ் கொடுக்க முடியாது என்று கூறி போட்டோ செஷனுக்கு மறுத்துள்ளார்.
ஆனால் ராஜாதி ராஜா பட குழுவினரோ... போட்டோ செஷன் மட்டும்தான் இப்படி, படத்தில் அப்படி காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சமாதானம் பேசியது. இருப்பினும், தனக்கு உள்ள பேம்லி கேர்ள் இமேஜை இழக்க விரும்பவில்லை என்று கூறிய சந்தியா, ராஜாதி ராஜா படத்தில் நடிக்கவில்லை என்று அதிரடியாக கூறி விட்டாராம். இதனால் வேறொரு புதிய நாயகியை தேடி வருகிறார்கள்.
4 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!
சந்தியாவுக்கு பாராட்டுகள்.
உண்மையிலேயே சந்தியா இப்படித்தானா நிருபர்?
namma santhiyava ippadi... na namba matan ya.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!