நடிகை நமீதாவின் சொந்தக்குரலை கேட்டும் வாய்ப்பு அனைத்து ரசிகர்களுக்கும் கிடைக்கப்போகிறது.
ஆம் நண்பர்களே..! நமீதா தற்போது நடித்து வரும் இந்திரவிழா படத்தில் நமீதாவை சொந்தக்குரலில் பேச வைக்கப் போகிறாராம் படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர். இதுபற்றி நமீதாவிடம் கேட்டபோது, ஆமாங்கண்ணா... நா என்னோட வாய்ஸ் இந்ட்ரவிலா படத்துலோ குடுக்கப்போறேன், என்கிறார் மழலைதமிழில். டைரக்டர் ராஜேஷ்வர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திரவிழா பிரமாணடமாக உருவாகி வருகிறது. படத்தில் நமீதாவுக்கு முக்கியமான கேரக்டர். தமிழ்சினிமாவில் பொதுவாக நடிகர்கள் மட்டுமே சொந்தக்குரலில் பேசுகிறார்கள். நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இனிமையான குரல் இல்லை என்று கூறி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதை எதிர்ப்பவன் நான். இப்போது நமீதாவுக்கு கூட சரியாக தமிழ் வராது என்று சிலர் கூறுகிறார்கள். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டா பிறந்தோம். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் தப்பே இல்லையே. நமீதாவுக்கு தமிழ் நடிகை என்ற முத்திரை கிடைத்து விட்டது. அவரும் தமிழ் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அதனால்தான் இந்த முடிவு, என்றார்.
பருத்தி வீரன் படத்தில் ப்ரியாமணி சொந்தக்குரலில் பேசியதால்தான் அவருக்கு நிறைய விருதுகள் கிடைத்தன என்பது நினைவு கூறத்தக்கது.
2008-07-27
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!