Director Barathi raja
தசாவதாரம் படத்தில் கதையே இல்லை என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.கிராமத்து பாணி படங்களை எடுத்து புகழ்பெற்ற டைரக்டர் பாரதிராஜா கேரள மாநிலம் திருச்சூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்ததார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில், தென்னிந்திய மொழி சினிமாக்களில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து ஒரு நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பாரதிராஜா, இப்போது வரும் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நல்ல கதைகள் இல்லை என்றுதான் நான் சொல்வேன். புதிய எண்ணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கதையை விட்டு விட்டு தொழில்நுட்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சமீபத்தில் வெளியான கமலின் தசாவதாரம் படத்தையே இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை கமலே ஒப்புக் கொண்டிருக்கிறார், என்று சொன்னார்.
இதற்கு காரணம் யார்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, கதை எழுதுபவர்கள் எல்லாம் இயக்குனர்களாக மாறியதுதான் காரணம் என்றார். அதேநேரத்தில் இயக்குனர்களின் முக்கியத்துவம் குறைந்து சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதும் இதற்கு காரணம் என்று சொல்லலாம். அதிலும் முன்னணி நடிகர்கள் தங்களுக்கு வசதியான, பஞ்ச்களை வைக்கச் சொல்லி நச்சரிக்கிறார்கள் என்றும் பாரதிராஜா கூறினார்.
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்களேன் நண்பர்களே...!
sariyaa sonneenga sir!
adhaiyellaam en poi thedureenga, indha kaalathu padathile? LOL
Subramniyapuram maadhiri oru sila nalla padamum varudhe-nu sandhoshapada vendiyadhu dhaan!
//அதிலும் முன்னணி நடிகர்கள் தங்களுக்கு வசதியான, பஞ்ச்களை வைக்கச் சொல்லி நச்சரிக்கிறார்கள் என்றும் பாரதிராஜா கூறினார்.
ayya rasa...
namakkuthaan intha 'NACHARIPPU" thollai kidaiyathaaae...appram enna ularal...evan call-sheet koduppaan namakku ippo...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!