டைரக்டர் ஒருவர் கைவிரித்ததால் புதுமுக நடிகை ஒருவர் நடுரோட்டில் தவியாய் தவித்தார்.
டைகர்டர் சந்திரகுரு இயக்கி வரும் படம் ஐம்புலன். இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷின் மகன் தமிழ் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த நடிகை மிருதுளாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த நடிகைதான் டைரக்டர் ஏமாற்றியதால் நடுரோட்டில் தவித்தேன் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்ய தயாராகி வருகிறார்.
என்ன டைரக்டர் ஏமாற்றிட்டாரா? என்ற ஒரேயரு கேள்வி கேட்டதற்கு பட்டாசாய் பதில்களை உதிர்த்தார் மிருதுளா. ஆவேசம் பொங்க அவர் சொன்ன தகவல்கள் வருமாறு:
போன வருஷமே ஐம்புலன் படத்துக்கு பூஜை போட்டாங்க. இந்த படத்துக்காக என்னிடம் 3 மாதம் தொடர்ந்து கால்ஷீட் கேட்டார்கள். நானும் 3 மாதம் கால்ஷீட் கொடுத்தேன். ஆரம்பத்தில் தொடர்ந்து 15 நாட்கள் சூட்டிங் நடந்தது. அதன் பிறகு சூட்டிங்கை தள்ளி வைத்திருப்பதாக கூறினார்கள். நானும் என் சொந்த ஊருக்கு போய் விட்டேன். அதன் பிறகு அவ்வப்போது டைரக்டர் சந்திரகுருவிடம் போனில் பேசுவேன். அவர் சரியான தகவல் எதுவும் சொல்லாததால் நான் வேறு படங்களில் கமிட் ஆனேன்.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் அவர் போன் செய்து, ஈரோட்டில் சூட்டிங் வைத்திருக்கிறோம். வந்துவிடுங்கள் என்று கூறினார். நானும் சரியென கூறி, என் அம்மாவுடன் ரெயிலில் ஈரோடுக்கு வந்தேன். ஆனால் அவர்கள் சொன்ன இடத்தில் யாருமே இல்லை. இதையடுத்து டைரக்டருக்கு போன் செய்தேன். பதில் இல்லை. என்ன ஆனது என்றும் எங்களுக்கு தெரியவில்லை. நானும் என் அம்மாவும் ஈரோட்டில் திக்குதெரியாமல் தவித்தோம். அதன் பின்னர் கேரளாவில் உள்ள என் அப்பாவுக்கு போனில் விஷயத்தை தெரிவித்தோம். அவர் வந்து எங்களை அழைத்து சென்றார்.
நடந்த உண்மை இதுதான். ஆனால் டைரக்டர் சந்திரகுரு நான் அதிகமாக சம்பளம் கேட்டதாகவும், அதனால் என்னை படத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் கூறியிருப்பதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆனால் என்னிடம் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை. தேவையில்லாமல் என்னை ஈரோடு வரவழைத்தது ஏன்? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுபற்றி நடிகர் சங்கத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறேன்.
இவ்வாறு மிருதுளா கூறினார்.
கேரளத்து பைங்கிளி மிருதுளாவுக்கு பதிலாக புதுமுக நடிகை தென்றலை ஐம்புலன் படத்தில் நியமித்திருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்.
2008-07-29
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்த குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
யோவ்! யாருயா அது மிருதுளாவ இம்சை பண்ணுறது....பாப்பாவ பார்த்தா பாவமா இருக்கு :--)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!