CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-26

ஹோம்லி நாயகியின் கிளாமர் ஸ்டில் எடுக்க போட்டோகிராபர் படும்பாடு


Actress Saloni actress saloni actress saloni
நண்பர் முரளிகண்ணன் அவர்கள் தமது வலைப்பூவில், தாவணியின் சக்தி என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த தாவணி பதிவை பார்த்ததும் நடிகைகளை கிளாமராக படம் எடுக்க போட்டோகிராபர்கள் படும் பாட்டை ஒரு பதிவாக போடலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. பதிவையும் போட்டு விட்டேன். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள் நண்பர்களே...!

பத்திரிகை போட்டோகிராபர்கள் நடிகைகளை அதுவும் ஹோம்லியான பேட்டியெடுக்கவும், போட்டோ செஷனுக்காகவும் செல்லும்போது எப்படியாவது கொஞ்சம் கிளாமராக படம் எடுத்து விட வேண்டும் என கருதி செல்வார்கள். செய்தி ஆசிரியரிடம் இருந்தும் அப்படியரு இன்ஸ்டக்ஷன்தான் வரும். நடிகையின் வீட்டுக்குப் போனால் அந்த நடிகை ஜீன்ஸ் பேண்ட்டும், மார்டன் ஷர்ட்டையும் போட்டு இம்மியளவும் உடலை வெளியே காட்டாத ஆடைகளை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க தயாராக இருப்பார். போட்டோகிராபரும், நிருபரும் மண்டை காய்ந்து, வேறு ஏதாவது காஸ்ட்யூம் போட்டால் நன்றாக இருக்குமே என்று பேச்சு கொடுப்பார்கள். அதன்பிறகு தாவணி போட்டால் இன்னும் ஹோம்லியாக தெரியுமே... என்று அடுத்த பிட்டை போடுவார்கள். நடிகையும் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே என்று பாவாடை தாவணியில் பளபளவென வந்து நிற்பார்கள். அதன் பின்னர் போட்டோகிராபர் ஏகப்பட்ட குஷியாகி விடுவார். சைடு ஆங்கிளில் படங்களை சுட்டுத் தள்ளுவார். கடைசியில் படம் பத்திரிகையில் வெளியான பின்னர்தான் போட்டோகிராபரின் காது கிழியும் அளவுக்கு டோஸ் கிடைக்கும் நடிகையிடம் இருந்து...!

9 comments:

Samuthra Senthil said...

இந்த பதிவு குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

Ganeshkumar said...

Ipdi vera nadakkutha?

முரளிகண்ணன் said...

தொழில் ரகசியத்தை வெளியில் சொல்றீங்களே?
பரவாயில்லை இப்பதான் தமிழ் தெரிஞ்ச நடிகைகளே இல்லையே.

rapp said...

உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனாலும் சொல்றேன், பொறியியல் கல்லூரிகளில் என்னோட சித்தப்பா எல்லாம் படிச்ச காலத்திலேயே தாவணி அணிய மட்டும் தடை இருந்தது. இப்போக் கூட பல இடங்களில் ட்ரஸ் கோட் படி தாவணி தடை செய்யப் பட்ட ஒரு உடை

கிரி said...

நிருபர் முதல் முறையா உங்கள் அனுபவத்தை கூறி இருக்கீங்க. திரை செய்தி மட்டுமல்லாது இதை போல செய்திகளையும் கொடுத்தால் வித்யாசமாக இருக்கும்.

மங்களூர் சிவா said...

/
கடைசியில் படம் பத்திரிகையில் வெளியான பின்னர்தான் போட்டோகிராபரின் காது கிழியும் அளவுக்கு டோஸ் கிடைக்கும் நடிகையிடம் இருந்து...!
/

அரசியல்ல இதெல்லாம் சாதா'ரணம்'பா என அடுத்த பேட்டிக்கு/ போட்டோ ஷூட்டுக்கு போய்கொண்டு இருப்பார் - இதை விட்டுட்டீங்களே!

:))))))))

Samuthra Senthil said...

//முரளிகண்ணன் said...
தொழில் ரகசியத்தை வெளியில் சொல்றீங்களே?
பரவாயில்லை இப்பதான் தமிழ் தெரிஞ்ச நடிகைகளே இல்லையே.
//


தமிழ் ‌தெரிஞ்ச தமிழ் நடிகையோட படம் எடுக்கும்போது எமக்கும், எமது போட்டோகிராபருக்கும் ஏற்பட்ட அனுபவம்தாங்க இந்த பதிவு.

Samuthra Senthil said...

//rapp said...
உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனாலும் சொல்றேன், பொறியியல் கல்லூரிகளில் என்னோட சித்தப்பா எல்லாம் படிச்ச காலத்திலேயே தாவணி அணிய மட்டும் தடை இருந்தது. இப்போக் கூட பல இடங்களில் ட்ரஸ் கோட் படி தாவணி தடை செய்யப் பட்ட ஒரு உடை
//

தாவணிக்கு தடை போடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது ராப். அதனை பினனொரு முறை பதிவாக வெளியிட முயற்சிக்கிறேன்.

Samuthra Senthil said...

//மங்களூர் சிவா said...
அரசியல்ல இதெல்லாம் சாதா'ரணம்'பா என அடுத்த பேட்டிக்கு/ போட்டோ ஷூட்டுக்கு போய்கொண்டு இருப்பார் - இதை விட்டுட்டீங்களே!//

சரியாக சொன்னீர்கள் மங்களூர் சிவா..! பின்னூட்டத்துக்கும்... தொடர் வருகைக்கும் நன்றி!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!