சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் பொது விழாவில் பங்கேற்காததற்கு காரணத்தை தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு சினிமா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த் இதனை தெரிவித்தார்.
தெலுங்கு நடிகர் அருண்குமார், நடிகை சினேகா நடிக்கும் ஆதிவிஷ்ணு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் ஒரு சிறந்த பேச்சாளன் கிடையாது என்று பேசியபடியை தனது பேச்சை ஆரம்பித்தார். மேலும் அவர் பேசியதாவது:
பொதுவா நான் பெரும்பாலும் பொதுவிழாக்கள்ல பங்கேற்பதயும், பேசுறதையும் தவிர்ப்பேன். நான் ஏதாவது ஒரு விஷயத்தை பேசினா... அது வேற மாதிரியா மாறிடுது. அது பெரிய பிரச்னையா இருக்கு. நான் பெரிய பேச்சாளனும் இல்ல. அதுக்கான தெறமையும் என்கிட்ட இல்ல. நடிகர் அருண்குமார், நண்பர் தசரி நாராயணாவின் மகன். இந்த நேரத்துல தாசரி நாராயணா பத்தி ஏதாவது சொல்லியாகணும். இருபது, இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் மும்பையில்... அப்போ அது பாம்பே.. ஒரு இந்தி பட சூட்டிங்குல இருந்தேன். இந்தி வசனங்களை தெலுங்குல எழுதி வைத்துக்கொண்டு படிப்பேன். அப்போ 15 நிமிஷத்துல பேச வேண்டிய வசனத்த ஒரே டேக்குல முடிச்சேன். நேரத்தை சிக்கனப்படுத்துற இந்த டெக்னிக் என்னோடது இல்ல... தாசரி நாராணயனுடையது. அருண்குமார் வளரும் கலைஞர். அப்பாவிடம் நிறைய விஷயம் இருக்கு. அதயெல்லாம் கத்துக்கிட்டாலே போதும். பெரிய ஆளாயிடலாம்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
2008-07-29
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
It could widen my imagination towards the things that you are posting.
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!