CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-28

மர்மயோகியில் ரங்கராஜன் நம்பி கேரக்டர் : புது தகவல்

Actor Kamal hasan, marma yogi, dasavatharam
உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள படம் மர்மயோகி. இந்த படத்துக்கு ரூ.120 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் திரையுலகின் பல வசூல் சாதனைகளையும் முறியடித்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் தசாவதாரம் படத்தில் அனைவரையும் கவர்ந்த கேரக்டர் ரங்கராஜன் நம்பி. இந்த கேரக்டர் 12ம் நூற்றாண்டில் உள்ள கேரக்டர். பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்திழுந்த இந்த கேரக்டரை தனது அடுத்த படத்தில் இணைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தான் இயக்கி, நடிக்கவிருக்கும் மர்மயோகி படம் கி.பி. 7ம் நூற்றாண்டை அடிப்படையாக கொண்ட படம் என்று ஏற்கனவே கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் 12ம் நூற்றாண்டு ரங்கராஜன் நம்பியை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக இப்போது தகவல்கள் கசிந்துள்ளன.

மர்மயோகி படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி என்பது கொசுறு தகவல்.

டவுட் தங்கபாலு : (தசாவதாரம் படத்தின் மூலம் கெடச்ச பணத்தயெல்லாம் மர்மயோகியில போட்டுருவாரோ...?)

1 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!