பெறுனர் : வாசக நண்பர்கள்,
நிருபர் வலைப்பூ.
(பொருள் : சினிமா நிருபர் வலைப்பூவின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு)
அன்பு வாசக நண்பர்களே...!
வணக்கம்.
நிருபர் வலைப்பூ உருவான விதம் பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகளில் சொல்லி விட்டேன். வலைப்பூ ஆரம்பித்த புதிதில் 10 ஆயிரம் வாசகர்கள் பார்த்ததை ஒரு பதிவாக போட்டிருந்தேன். அதன் பின்னர் 20 ஆயிரம் வாசக நண்பர்கள் பார்த்ததை பதிவாக போட்டிருந்தேன். இப்போதும் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் வாசக அன்பர்களுக்கும், நான் வலைப்பூ தொடங்க காரணமாக இருந்த அன்பர்களுக்கும், தற்போது வலைப்பூவுக்கு செய்தி மற்றும் புகைப்படம் கொடுத்து வரும் அன்பர்களுக்கும், தொழில்நுட்ப ஆலோசனை கூறும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் விதமாகத்தான் இந்த பதிவை போடுகிறேன்.
ஆம். வாசக நண்பர்களே...! நிருபர் வலைப்பூவை நேற்று (26/07/08) மட்டும் 982 பேர் பார்த்து சென்றுள்ளனர். இந்த வாசகர்கள் நேற்று படித்த பக்கங்களின் எண்ணிக்கை 4617. (ஆதாரம் ஹிஸ்டாட்ஸ் டாட் காம்) ஒரே நாளில் குறைந்தது ஆயிரம் பேரையாவது எனது பதிவுகள் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய லட்சியமாக இருந்து வருகிறது. அதற்கு பறைசாற்றும் வகையில் நேற்றைய தினம் ஏராளமான வாசக நண்பர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
எத்தனையே அனானி கமெண்ட்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், சினிமா நிருபரையும், சினிமாநிருபர் வலைப்பூவையும் தவறாக சித்தரித்தும் வந்தன. அவற்றையெல்லாம் நான் என்றுமே பொருட்படுத்தாததும் எனது இந்த வெற்றிக்கு காரணம் என்றே நான் கருதுகிறேன். (982 பேர் பார்த்ததெல்லாம் சாதனையா என்று யாராவது கேட்டால்... அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது... என்னைப் பொறுத்தவரை இதனை வெற்றியாகவே கருதுகிறேன்.)
வலைப்பூ ஆரம்பித்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் பார்ப்பதையே வெற்றியாக நினைதேன். அதன் பின்னர் 300 பேர் இப்போது ஆயிரத்தை நெருங்குகிறது. இது இப்படியே நிலைத்திருக்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்கிற ரீதியில் தொடர்ந்து செய்திகளை நல்ல முறையில் ஆபாச கலப்பின்றி வெளியிடுவேன், வாசக நண்பர்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...!
புதிதாக உதயமாகவுள்ள சினிமா நிருபர் டாட் காம் தளத்தில் அதிக அளவிலான செய்திகள், ஸ்டில்களை கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி...!
இப்படிக்கு
என்றென்றும் அன்புடன்
சினிமா நிருபர்.
என்றென்றும் அன்புடன்
சினிமா நிருபர்.
9 comments:
நிருபர் வலைப்பூவில் தாங்கள் விரும்பி படித்த செய்தி எது என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...! அதேடு தாங்கள் வேறு என்ன மாதிரியான செய்திகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் தெரிவித்தால் அது எமது வளர்ச்சிக்கு உதவும்.
எங்க இருந்து சார் இவ்வளவு பேர் வர்றாங்க
வாழ்த்துக்கள் நிருபரே !
//எத்தனையே அனானி கமெண்ட்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், சினிமா நிருபரையும், சினிமாநிருபர் வலைப்பூவையும் தவறாக சித்தரித்தும் வந்தன.//
எல்லாருக்கும் அது வருகிறது நிருபரே !இனிமேல் அது கொஞ்சம் கொறையும். ஒரு சைக்கோ பிடிபட்டுவிட்டான் !
பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
நிருபரே எதற்கும் கவலை படாதீங்க, உங்கள் செய்திகளை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. (நீங்கள் கூகிள் அனலைஸ்டிக்ஸ் ல் இணைத்தால் இன்னும் உங்கள் தளத்தை பற்றி விரிவான தகவல்களை பெறலாம்)
தொடர்ந்து நாகரீகமான முறையில் உங்கள் செய்திகளை தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குறைந்த காலத்தில் நிறைய வாசகர்கள் என்றால் அது நீங்கள் தரும் நாகரிகமான செய்தியாலே, எனவே அவர்களை புறந்தள்ளுங்கள் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் என் போல பல பேர் இருக்கிறார்கள்.
உங்கள் புதிய தளம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் (சீக்கிரம் தளத்தை வெளியிடுங்க)
எனவே அடித்து நொறுக்குங்க நிறுத்தாம :-)
//ARUVAI BASKAR said...
இனிமேல் அது கொஞ்சம் கொறையும். ஒரு சைக்கோ பிடிபட்டுவிட்டான் !
பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !//
பின்னூட்டத்துக்கு நன்றி அருப்புக்கோட்டை பாஸ்கர். ஒரு சைக்கோ பிடிபட்டு விட்டான் என்று கூறுகிறீர்களே... யார் அந்த சைக்கோ என்று சொல்லுங்களேன். என்னைப்போல பலரும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பார்கள் அல்லவா?
//உங்கள் செய்திகளை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது//
நான் பெற்றுள்ள இந்த வெற்றியில் ஒரு பங்கு உங்களுக்கும் இருக்கிறது கிரி.
//தொடர்ந்து நாகரீகமான முறையில் உங்கள் செய்திகளை தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
தாங்களைப் போன்ற வாசக நண்பர்கள் என்னை தடம் மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. தாங்கள்தானே அடிக்கடி நாகரீகத்தைப் பற்றி எமக்கு பின்னூட்டம் போடுவீர்கள். கண்டிப்பாக தடம் மாற மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
//குறைந்த காலத்தில் நிறைய வாசகர்கள் என்றால் அது நீங்கள் தரும் நாகரிகமான செய்தியாலே, எனவே அவர்களை புறந்தள்ளுங்கள். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் என் போல பல பேர் இருக்கிறார்கள்//
பொதுவாகவே போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்கிற ரீதியில்தான் என்னுடைய அடுத்தடுத்த செயல்பாடுகள் இருந்து வரும். எனக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்களை புறந்தள்ளியபடியால்தானே இன்று இந்த சிறு வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கிறது.
//உங்கள் புதிய தளம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் (சீக்கிரம் தளத்தை வெளியிடுங்க)//
நன்றி கிரி...! உங்களைப் போன்ற வாசக நண்பர்கள் எமது புதிய தளத்துக்கு வந்து ஊக்குவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தானே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இன்னும் சில தினங்களில் புதிய தளம் வெளியீடப்படும் தேதியை அறிவிக்கிறேன்.
தயவு செய்து கீழே உள்ள லிங்க் ஐ தொடரவும் !
சைக்கோ பிடிபட்ட வரலாறு தெரியவரும் !
http://dondu.blogspot.com/2008/07/blog-post_24.html
ஆயிரம் ைக கள் ம ைறத்து நின்றாலும் ஆதவன் ம ைறவதில்ைல. உங்கள் பயணம் என்றும் முடிவதில்ைல. வாழ்த்துக்கள் நண்ப ேர...
வாழ்த்துக்கள்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!