தமிழர்களே.. தமிழர்களே... நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்.
- கலைஞர் டி.வி.,யில் அடிக்கி நாம் கேட்கும் வாசகங்கள்தான் இவை.
இந்த வாசகங்களுக்கும், இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி விடாதீர்கள் நண்பர்களே..!
வலைப்பதிவுலகில் நான் கால் பதித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டது. கடந்த ஆண்டு இறுதியிலேயே வலைப்பூவை தொடங்கியிருந்தாலும், கொஞ்சம் தாமதமாகத்தான் பதிவிடத் தொடங்கினேன். நான் எழுதும் சினிமா செய்திகளை ஏராளமான வாசகர்கள் வந்து பார்த்து, ரசித்து படிக்கிறார்கள். சிலர் பின்னூட்டமிட்டுச் செல்கிறார்கள். இவற்றை பார்க்கும்போது மேலும் அதிக அளவில் செய்திகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதன் விளைவால்தான் தொடர்ந்து பதிவுகளை பதித்து வருகிறேன்.
சரி.. விஷயத்து வருகிறேன். நிருபர் வலைப்பூவை இதுவரை 23,075 பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இன்று மட்டும் 560க்கும் மேற்பட்ட வாசகர்கள் எமது வலைப்பூவை பார்த்து சென்றிருக்கிறார்கள். இதுவரை வாசகர்களால் திறக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டி விட்டது. இன்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வாசக நண்பர்கள் தமிழ்மணத்தின் வாயிலாக வந்தவர்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு நன்றி சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில் தமிழ்மண நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களாக நான் தொடர்ந்து கேட்டு வரும் சிறு கோரிக்கைக்காகத்தான் இந்த பதிவு.
நான் எழுதும் இடுகைகளை தமிழ்மணத்தில் புதுப்பித்தால் இடது ஓரத்தில் மறுமொழிக்கு கீழே இருக்கும் செய்திகள் பகுதியின் கீழே பதிவாகிறது. இதனை முகப்பு பக்கத்தில் தெரிய வைக்க ஆவண செய்ய வேண்டுமாய் ஏற்கனவே தமிழ்மணம் நிர்வாகத்துக்கு தனிமடல் அனுப்பியிருக்கிறேன். ஆனால் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்மணம் பழைய வெர்சனில் நிருபர் வலைப்பூவின் இடுகைகள் பிரதான முகப்பு பக்கத்தில் தெரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்னைக்கு இனியாவது தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதோ.. தமிழ்மணத்துக்கு எனது வித்தியாசமான கோரிக்கை வாசகம்.
தமிழ்மணமே... தமிழ்மணமே... நீங்கள் எம்மை முகப்பு பக்கத்தில் தெரியவைத்தால் இன்னும் அதிகமான செய்திகளை எழுதிக்கொண்டே இருப்பேன். எழுதுவதை நிறுத்தி விடமாட்டேன். எனது செய்திகளை அதிகமான தமிழ்மண வாசகர்கள் படிக்கலாம்...!
2008-07-24
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நிருபர் வலைப்பூவின் தொடர் வாசக நண்பர்களே... எமது பதிவுகளை பிரதான முகப்பு பக்கத்தில் தெரியவைக்க நீங்களும் தமிழ்மணத்துக்கு ஒரு கோரிக்கை வையுங்களேன்!
உங்கள் பிரச்சனை விரைவில் தீர்ந்து உங்கள் பதிவுக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை தினமும் 1000 ஆக உயர என வாழ்த்துக்கள். மிகைபடுத்தவில்லை, அதற்கான வாய்ப்பு 100% இருக்கிறது.
தமிழ்மணமே சுவையான செய்திகளைத்தரும் நிருபர் வலைப்பூவை பிரதான முகப்பு பக்கத்தில் தெரியவைக்கவும்.
தமிழ்மணமே தமிழ்மணமே நிருபரை பிரதான முகப்பில் காட்டுங்கள் தமிழ்மணமே
உங்கள் கோரிக்கை நிறைவேற வாழ்த்துகள்.
//கிரி said...
உங்கள் பிரச்சனை விரைவில் தீர்ந்து உங்கள் பதிவுக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை தினமும் 1000 ஆக உயர என வாழ்த்துக்கள். மிகைபடுத்தவில்லை, அதற்கான வாய்ப்பு 100% இருக்கிறது.//
கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி கிரி...! எனது எண்ணமும் நிருபர் வலைப்பூவை தினமும் குறைந்தது ஆயிரம் பேராவது பார்க்க வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதிக அளவில் செய்திகளை எழுதுகிறேன்.
தமிழ்மணமே சுவையான செய்திகளைத்தரும் நிருபர் வலைப்பூவை பிரதான முகப்பு பக்கத்தில் தெரியவைக்கவும்.
யானும் அவ்வண்ணமே கோரும்,
நாமக்கல் சிபி!
//முரளிகண்ணன் said...
தமிழ்மணமே சுவையான செய்திகளைத்தரும் நிருபர் வலைப்பூவை பிரதான முகப்பு பக்கத்தில் தெரியவைக்கவும்.
//
ரீப்பீட்டேய்...
உங்கள் கோரிக்கை நிறைவேற வாழ்த்துகள்.
சினிமா நிருபரே... பிரதான பக்கத்துல தெரியாமலேய நீங்க இப்படி வெளுத்து கட்டுறீங்க. தமிழ்மணம் முகப்புல உங்கள் பதிவுகள் தெரிய ஆரம்பித்தால் ஆயிரம் என்ன.. இரண்டாயிரம் பேர் கூட வருவார்கள். உங்கள் படைப்புகள் அனைத்தும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. நான் ஆரம்பத்தில் இருந்தே உங்களது தீவிர வாசகன். தினமும் உங்களது புதிய பதிவுகளை படிக்காமல் இருந்ததில்லை. தாங்களது பிளாக் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
சினிமா செய்திகளை ரொம்பவே நாகரீகமான முறையில் எழுதி வரும் சினிமா நிருபர் பிளாக்கை உங்கள் முகப்பு பக்கத்தில் தெரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மண வாசகனாக கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
சினிமா செய்திகளை ரொம்பவே நாகரீகமான முறையில் எழுதி வரும் சினிமா நிருபர் பிளாக்கை உங்கள் முகப்பு பக்கத்தில் தெரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மண வாசகனாக கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
muthukumar
July 25, 2008
ஆதரவுக் குரல் கொடுத்துள்ள முரளிகண்ணன், துபாய் சிரோன்மணிக்கு நன்றி...!
நிருபரே !, உங்கள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் !
தமிழ்வெளி மற்றும் திரட்டியில் register செய்யவும் !
அங்கும் நிறைய்ய வாசகர்கள் வருகிறார்கள் !
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்
நாமக்கல் சிபி, கலாமணி, சென்22 ஆகியோருக்கும் எமது நன்றிகள்...!
//ஏ.எஸ்.கே.சுதாகரன், சென்னை said...
சினிமா நிருபரே... பிரதான பக்கத்துல தெரியாமலேய நீங்க இப்படி வெளுத்து கட்டுறீங்க. தமிழ்மணம் முகப்புல உங்கள் பதிவுகள் தெரிய ஆரம்பித்தால் ஆயிரம் என்ன.. இரண்டாயிரம் பேர் கூட வருவார்கள். உங்கள் படைப்புகள் அனைத்தும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. நான் ஆரம்பத்தில் இருந்தே உங்களது தீவிர வாசகன். தினமும் உங்களது புதிய பதிவுகளை படிக்காமல் இருந்ததில்லை. தாங்களது பிளாக் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.//
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சுதாகரன்.
//mumu said...
தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
சினிமா செய்திகளை ரொம்பவே நாகரீகமான முறையில் எழுதி வரும் சினிமா நிருபர் பிளாக்கை உங்கள் முகப்பு பக்கத்தில் தெரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மண வாசகனாக கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
muthukumar//
நன்றி muthukumar
//ARUVAI BASKAR said...
நிருபரே !, உங்கள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் !
தமிழ்வெளி மற்றும் திரட்டியில் register செய்யவும் !
அங்கும் நிறைய்ய வாசகர்கள் வருகிறார்கள் !
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்//
உங்கள்ஆலோசனைக்கு நன்றி அருவை பாஸ்கர். திரட்டியில் ஏற்கனவே எமது பதிவுகள் தெரிகின்றன. திரட்டி டாட் காமில் சினிமா என்ற பகுதியின் கீழ் எமது பதிவுக்கு மட்டுமே பிரதானமாக இடம் ஒதுக்கியுள்ளார் நண்பர் வெங்கடேஷ் அவர்கள். அதேபோத தமிழ்பிளாக்ஸ் டாட் காமிலும் நிருபர் வலைப்பூவின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தெல்லாம் எமக்கு வாசகர்கள் வருகிறார்கள். தமிழ்வெளியில் இணைக்க முயற்சி செய்கிறேன். தேன்கூட்டின் இணைக்க பல தடவை முயற்சித்தும் பலனில்லை. எப்படி இணைப்பது என்று மூத்த பதிவர்கள் யாராவது ஆலோசனை சொன்னால் அதிலும் இணைத்து விடுவேன்.
இத்தனை இருந்தும் தமிழ்மணத்தில் பிரதான முகப்பு பக்கத்தை விரும்புவதற்கு காரணம் என்ன தெரியுமா நண்பர்களே? நான் எழுதும் சினிமா செய்திகள் கடைகோடியில் தெரிவதால் அதற்கு தமிழ்மணத்தில் முக்கியத்துவம் இல்லாததுபோன்ற உணர்வு என்னுள் எழுகிறது. அதனால்தான் இந்த பதிவு. ஆனால் இன்று வரை எனது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!