CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-25

ஓவர்... ஓவர்... மாளவிகா பிரச்னை ஓவர்


கார்த்தீகை பட விவகாரத்தில் நீடித்து வந்த மாளவிகா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் மாளவிகாவுக்கு பதிலாக நடிக்க நடிகை அமோகாவை ஓப்பந்தம் செய்துள்ளனர்.

டைரக்டர் வீரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கார்த்தீகை. இந்த படத்தில் நடிகை மாளவிகாவுக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டிருந்தது. படத்தின் சூட்டிங் பாதியளவு முடிந்துள்ள நிலையில் மாளவிகா கர்ப்பமானார். 5 மாத கர்ப்பம் ஆனதால் கடினமான அசைவுகளில் நடனமாட முடியாது என்று கூறிய மாளவிகாவை, ஒருவழியாக சரிகட்டி அழைத்து வந்தனர். சூட்டிங்கின்போது படத்தின் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, தன்னிடம் தவறாக நடக்க முயன்றார், வயிற்றில் கை வைத்து தடவினார் என்று தடாலடியாக ஒரு செக்ஸ் புகாரை கூறிவிட்டு சூட்டிங்கில் இருந்து ஓட்டம் பிடித்தார் மாளவிகா. இதனைத் தொடர்ந்து அவர் மீது நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்யப்பட்டது. இந்த புகாருக்கு பதில் அளித்த மாளவிகா, இனி குழந்ததை பிறந்த பிறகுதான் கார்த்தீகை படத்தில் நடிப்பேன் என்று கூறினார்.

நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போடுவோம் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மிரட்டியும் பலன் இல்லை. சட்ட ரீதியாக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று அதிரடி பதில்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பின்னர் என்ன ஆனதோ? தெரியவில்லை. மாளவிகா மீது வழக்கு போடும் எண்ணம் இல்லை என்று படஅதிபர் ஆஞ்சநேயலு தெரிவித்தார். இதையடுத்து மாளவிகாவுக்கு பதில் நமீதாவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் அதிக சம்பளம் கேட்டதால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. வேறு நடிகையை தேடி வந்த இயக்குனர், நடிகை அமோகாவை பிடித்து விட்டார். நடிகர் மாதவனுடன் ஜேஜே படத்தில் நடித்த அமோகா கார்த்தீகை படத்தில் நடிக்க ஒப்பந்த கையெழுத்து போட்டு விட்டாராம்.

4 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

முரளிகண்ணன் said...

என்னதான் நடக்குது?

கிரி said...

:-((((((((((((((((

Samuthra Senthil said...

பின்னூட்டமிட்ட முரளிகண்ணன், கிரிக்கு நன்றிகள்...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!