சுல்தான் படத்தின் வாய்ப்பை மறுத்ததற்கு பல்வேறு வதந்தியை கிளப்பி விட்டதால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை இலியானா.
தெலுங்கில் த்ரிஷாவுடன் போட்டி போடும் அளவுக்கு மார்க்கெட் உயர்ந்த நடிகை இலியானாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியர் படத்தில் நடிக்க கூப்பிட்டதாகவும், கேட்ட சம்பளம் கொடுக்காததால் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என்று பட வுட்டுகளிலும் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. இந்த துணிச்சலான முடிவை திரையுலகை சேர்ந்த சிலர் பாராட்டினாலும், பலர்... சூப்பர் ஸ்டார் படத்துக்கே நோ சொல்லிட்டியேம்மா... என்று ஆதிகாலத்து பாட்டி ரேஞ்சுக்கு அட்வைஸ் பண்றாங்களாம்.
இதுபற்றி இலியானாவிடம் கேட்டால் ஏக கடுப்பாகி விடுகிறார். தமிழ்சினிவுல மட்டும்தான் இப்படியெல்லாம் இருக்குதுன்னு நினைக்கிறேன். படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே எப்படியெல்லாம் வதந்தியை கிளப்பி விடுறாங்க. சுல்தான் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டேன் என்பதெல்லாம் வதந்தி. என்னுடைய மார்க்கெட் ரேஞ்ச் எனக்கு நன்றாகவே தெரியும். அதோடு நான் இப்போ தெலுங்கு படத்துல கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். ரஜினியுடன் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக என்ன செய்ய முடியும்? பேசித் தள்ளுகிறார்.
2008-07-29
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!