2008-07-09
கமலுடன் நடிக்க ஸ்ரேயா மறுப்பு
உலக நாயகன் கமல்ஹாசனுடன் மர்மயோகி படத்தில் நடிக்க நடிகை ஸ்ரேயா மறுத்து விட்டாராம்.
தசாவதாரம் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் படம் மர்மயோகி. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, கமலுடன் மர்மயோகியில் நடிக்க மறுத்து விட்டதாக கோலிவுட்டில் பரபரப்பு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி மும்பையில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், கமல் சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. மர்மயோகியில் நடிக்க அழைத்தார்கள். தற்போது நான் தமிழ், இந்தி, தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்டும் தேதியில் கால்ஷீட் கொடுக்க இயலாது. இதனால் மர்மயோகியில் நடிக்க மறுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.
ஆனால் உண்மை காரணம் எதுவாக இருக்கும் என்று கோலிவுட்டில் பலரும் பல மாதிரி யோசித்து வருகிறார்களாம்.
Labels:
kamalhasan,
shriya
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்க¬ளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
enna kodumi nirubare ithu?
அவர் வழக்கம்போல என் படத்தில் நடிப்பதே பெரிய சம்பளம், அதனால, ஒரு பத்து இருபது லட்சத்தை வாங்கிட்டு/இல்ல எனக்கு கொடுத்திட்டு மூணு வருஷ கால்ஷீட்ட கொடுத்திடச் சொல்லி இருப்பார்:):):)
ithu comedy thane................
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!