CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-06

சேர்ந்துட்டாங்கய்யா சேர்ந்துட்டாங்க...! (இது சிம்பு&நயன் கதையேதான்)


நயன்தாராவை எப்படியாவது பேச வைத்து விடுவேன் என்று கங்கனம் கட்டித் திரிந்த சிம்பு இப்போது புது தெம்புடன் திரிகிறார். இதற்கு காரணம் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நயன்தாரா சிம்புவுடன் பேசியதுதான்.
வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்ததால் நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் காதல் என்று வதந்தி பரவியது. இதனை இருவருமே மறுக்காமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றிய விவகாரம் பத்திரிகைகளுக்கு தெரியவந்து... பக்கம் பக்கமாக எழுதித் தள்ளி சிம்பு & நயன் காதலை சினிமா ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டியது. பின்னர் தனுஷ§டன் ஜோடி சேர்ந்து நடிக்கும் விவகாரம் உள்ளிட்ட சில விவகாரங்களால் இருவருக்கு இடையேயும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறிவிட்டு பிரிந்து விட்டனர்.

பிரிவுக்கு பிறகு மீண்டும் சேர்வதற்கு இது என்ன சினிமாவா? என்று நக்கல் பேசிய நயன்தாரா இப்போது சிம்புடன் மீண்டும் பேசியுள்ளார். இந்நிலையில் சென்னையில் ஜெமினி பாலத்துக்கு அருகே அமைந்துள்ள தி பார்க் ஓட்டலில் சிம்புவும், நயன்தாராவும் சுமார் 20 நிமிடங்கள் தனிமையில் பேசியுள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் கோலிவுட்காரர்கள் சும்மா இருப்பார்களா? சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் காதலிக்கத் தொடங்கி விட்டனர் என்று பெரும் புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இருவரில் யாராவது ஒருவர் வாயை திறந்தால்தான் உண்மை தெரியவரும். இந்த சந்திப்பின்போது நடிகர்கள் விஷால், நவ்தீப், நடிகை த்ரிஷா ஆகியோரும் உடன் இருந்திருக்கிறார்கள்.

நடிகை த்ரிஷாவிடம் இதுபற்றி போனில் கேட்டோம். அவர் கூறுகையில், அவங்க முன்னாள் காதலர்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியாது. இந்த சந்திப்பு திட்டமிட்டு நடக்கவில்லை என நினைக்கிறேன். ஏதேச்சையாக நடந்த சந்திப்பு, என்றார்.

3 comments:

Samuthra Senthil said...

சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் காதலிக்கலாமா? என்பது பற்றி வாசகர்களாகிய நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்...!

நாமக்கல் சிபி said...

//சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் காதலிக்கலாமா?//

நடிப்பது : அவர்களது தொழில்
காதலிப்பது : அவர்களது சொந்த விஷயம்(எல்லாரையும் போலவே)

இதைப் பத்தி நாம ஏன் விவாதிக்கணும் கிறேன்!

கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்!
கிழவியைத் தூக்கி மனைல வையின்னானாம்!

அங்கங்கே விலை வாசி ராக்கெட் மாதிரி போகுது!

பணத்துக்கு வேல்யூ குறைஞ்சிகிட்டே போகுது!

எப்ப இருந்து பழையபடி சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மாட்டு வண்டி, குதிரை வண்டின்னு ஆகுமோ!

ஐடி லெவல் சம்பளம் வாங்குற மக்கள் - ஓகே - அவங்களை விடுங்க!

நடுத்தர மக்களுக்கே இப்ப தாவு தீருதாம்!

இந்த லட்சணத்துல நடுத்தரக்கும் கீழே இருக்குற குடும்பங்களோட நிலைமையை நினைக்க யாருக்காச்சும் நேரம் இருக்கா? அவங்களும் நம்மை மாதிரியே வாடகை கொடுத்து இருக்கணும், காசு கொடுத்துதான் பால்,மளிகை, காய்கறி வாங்கணும், பிள்ளைங்களை படிக்க வெக்கணும்.

சிம்பு-நயன்தாரா காதல் அதுவும் மீண்டும் காதல் ரொம்ப முக்கியமா இப்போ?

Anonymous said...

///


அங்கங்கே விலை வாசி ராக்கெட் மாதிரி போகுது!

பணத்துக்கு வேல்யூ குறைஞ்சிகிட்டே போகுது!

எப்ப இருந்து பழையபடி சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மாட்டு வண்டி, குதிரை வண்டின்னு ஆகுமோ!

ஐடி லெவல் சம்பளம் வாங்குற மக்கள் - ஓகே - அவங்களை விடுங்க!

நடுத்தர மக்களுக்கே இப்ப தாவு தீருதாம்!

இந்த லட்சணத்துல நடுத்தரக்கும் கீழே இருக்குற குடும்பங்களோட நிலைமையை நினைக்க யாருக்காச்சும் நேரம் இருக்கா? அவங்களும் நம்மை மாதிரியே வாடகை கொடுத்து இருக்கணும், காசு கொடுத்துதான் பால்,மளிகை, காய்கறி வாங்கணும், பிள்ளைங்களை படிக்க வெக்கணும்.

சிம்பு-நயன்தாரா காதல் அதுவும் மீண்டும் காதல் ரொம்ப முக்கியமா இப்போ?

///

Then why you came to cinema Nirumar's Blog..

Go and read Micro/Macro Economics and help Finance ministar...

Vanthutaanunga... karuthu solren tu...

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!