2008-07-25
இது ஸ்ருதி கமல் பற்றிய செய்தி
உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு முற்போக்கு சிந்தனைவாதி என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்போது அவர் தனது மகள் விஷயத்திலும் அதனை நிரூபித்திருக்கிறார்.
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி கமல், இசையில் அதிக ஆர்வம் உள்ளவர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் ஸ்ருதியைத் தேடி ஏராளமான சினிமா வாய்ப்புகள் வந்தன. பலரும் கமல்ஹாசனிடம் கேட்டனர். ஆனால் கமலோ, நடிக்கிறதும், நடிக்காததும் ஸ்ருதியோட விருப்பம் என்று சொல்லி வந்தார். அந்த நேரத்தில்தான் மாதவனுடன் தமிழில் புன்னகை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் புன்னகை படம் கைவிடப்பட்டது. ஸ்ருதியும் நடிக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தார். இதற்கிடையில் பாலிவுட்காரர்களும் ஸ்ருதியை சுற்றத் தொடங்கினார்கள். இதனால் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகியுள்ளார்.
சினிமா உலகுக்கு வந்து விட்டாலே, பார்ட்டி, பாட்டு, டான்ஸ் என்கிற ஒரு மாயை உலகுக்குள் சென்றாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. இந்த விதிக்கு ஸ்ருதி மட்டும் விதிவிலக்கா என்ன? தினமும் இரவில் பார்ட்டிக்கு சென்று விடுகிறாராம். இதுபற்றி கமலுக்கு தெரிந்தவர்கள் சிலர் கமலின் காதில் விஷயத்தை போட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் கமல்ஹாசன் அளித்த பதில்தான் அவர் முற்போக்கு சிந்தனைவாதி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஸ்ருதி இந்த நூற்றாண்டு பொண்ணு. அவளுக்கு எது சரி.. எது தப்புன்னு தெரியும். சொல்லிக் கொடுக்குறதுக்கு அவ சின்ன குழந்தையும் இல்லை. அவளப் பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தன் பாணியில் பதிலளித்தாராம். விஷயத்தை ஊதி பெருக்க நினைத்தவர்கள் புஸ்ஸ்ஸென திரும்பினார்கள்.
ஸ்ருதி கமல் பற்றிய செய்தின்னு சொல்லிட்டு ஸ்ருதிகமலைப் பற்றி தனியா எதுவுமே சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது அல்லவா? அதனால ஸ்ருதி கமலோட சொந்த இணையதள முகவரியை தருகிறேன். SHRUTHI KAMAL HASAN பற்றிய அனைத்து விவரங்களையும் அந்த தளத்தில் பார்க்கலாம். ஸ்ருதி கமல் இணையதள முகவரி : http://www.shrutihaasan.info/
Labels:
SHRUTHI KAMAL
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
மேலே இருக்கும் படம் தான் பார்க்க ஒரு மாதிரி இருக்கு. என் பார்வையில் தான் கோளாறா? !!! :-(
ஆமா கிரி, எனக்கு கூட ஒரு மாதிரியா தான் தெரியுது ....எனக்கும் காமாலை கண்ணு தான் போல :(
கிரி மற்றும் அரிஹரசெல்வன்...
உங்க பார்வையில எல்லாம் கோளாறுன்னு சொல்றதா... இல்லை படத்துல கோளாறுன்னு சொல்றதா? (இது அப்பா மகளுக்கு கொடுக்கும் அன்பு முத்தம்தான்... ஓ.கே.)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!