தசாவதாரம் வெற்றியைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹசன் அடுத்து தானே இயக்கி, நடிக்கும் மர்மயோகி படத்துக்கான வேலைகளில் இறங்கி விட்டார். படத்தின் தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து தசாவதாரம் போல் அல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்துள்ள கமல்ஹாசனுக்கு சரியான நாயகி இன்னமும் கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மை.
படத்தின் நடிகை பத்மப்ரியாவுக்கு முக்கியமான கேரக்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கமலுக்கு ஜோடி அல்ல. தனக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கஜோலை அணுகியுள்ளார் கமல். முதல் நாள் சரி.. ஓ.கே. என்று நல்ல தகவலை சொன்ன கஜோல் அடுத்த நாளே... கமல்ஹாசனுக்குபோன் போட்டு குட்டையை குழப்பி விட்டார். மர்மயோகியில் நடிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஒரு சின்ன பிரச்னை. என்னால் என் மகளை பிரிந்திருக்க முடியாது. அதனால் வெளிநாட்டு சூட்டிங் இல்லாமல் இந்தியாவுக்குள்ளேயே சூட்டிங்கை வைத்தால் கண்டிப்பாக நடித்துக் கொடுக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
இதனால் குழம்பிப் போன கமல்ஹாசன் பதில் எதுவும் சொல்லாமல், சரி... பார்ப்போம் என்று மட்டும் சொல்லி இணைப்பை துண்டித்து விட்டாராம். காரணம் படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகள் சுவீட்சர்லாந்தில் எடுக்கப்படவிருக்கிறதாம். இதற்கிடையில் கஜோலின் தங்கை நடிகை தனிஷா... நான் ரெடியா இருக்கிறேன் என்று பச்சைக் கொடி காட்டி எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் தகவல் பறக்கிறது. (மர்மயோகின்னு பேரு வெச்சாலும் வெச்சாலு மர்மமாகவேத்தான் இருக்குங்க...!)
2008-07-29
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
நல்ல வேளை! அவங்க வீட்டை சுத்தி படப்பிடிப்பு வைக்க சொல்லாம இருந்தாங்களே :-)
//மர்மயோகின்னு பேரு வெச்சாலும் வெச்சாலு மர்மமாகவேத்தான் இருக்குங்க//
ஹா ஹா ஹா
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!