2008-07-08
குசேலன் ரீலிஸ் தேதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
குசேலன் படத்தின் ரீலிஸ் மேலும் தள்ளிப் போகிறது. இறுதி கட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 1ம் தேதி படத்தை ரீலிஸ் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்துள்ள படம் குசேலன். இந்த படத்தை கவிதாலயா மற்றும் செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சந்திரமுகி படத்தை இயக்கிய டைரக்டர் பி.வாசு இயக்கியுள்ளார். ரஜினி, பசுபதி, நயன்தாரா, மீனா நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 25ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் படம் ரீலிஸ் மேலும் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் ரீலிஸ் தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது அதிகாரப்பூர்வமாக ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குசேலனில் பின்னணி இசை சேர்ப்பு, எடிட்டிங் பணிகள் நடப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் 1000 பிரிண்ட் போட திட்டமிட்டிருந்த பிரமிட் சாய்மீரா மேலும் 200 பிரிண்ட் அதிகமாக 1200 பிரிண்ட்போட முடிவு செய்துள்ளது. இதுதான் பட ரீலிஸ் தாமதத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
Kuselan,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
//முதலில் 1000 பிரிண்ட் போட திட்டமிட்டிருந்த பிரமிட் சாய்மீரா மேலும் 200 பிரிண்ட் அதிகமாக 1200 பிரிண்ட்போட முடிவு செய்துள்ளது//
Vaalthukkal
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நிருபர் நீங்கள் தேடுதல் பகுதி மற்றும் இதையும் படிங்க பகுதி இணைத்த பிறகு உங்கள் பதிவை திறந்தால் மெதுவாக தான் திறக்கிறது ..ஸ்ட்ரக் ஆகிறது :-(
ஆஹா, அப்போ ஆகஸ்ட் ஒன்னாந்தேதியிலருந்து பதினஞ்சாந்தேதி வரை தமிழ்மணம் முழுக்க இதப் பத்திதான் எல்லாரும் கிழி கிழின்னு கிழிக்கப்போறாங்க
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
குசேலன் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!