2008-07-24
அம்மு பாரதி கல்யாணத்தில் சிக்கல்
அம்முவாகிய நான் படத்தில் அம்முவாக நடித்த அழகுப்பெண் பாரதிக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது என்பது தெரிந்த சங்கதிதான். விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். திருமணத்துக்கு பிறகு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்று எல்லா நடிகைகளைப் போலவும் இவரும் அதிரடியாய் பேட்டி கொடுத்தார். திருமண தேதியை குறிக்கும் வேலைகளிலும் அம்மணியின் வீட்டார் இறங்கினார்கள்.
இந்த நிலையில் பாரதி கடைசியாக நடித்த சற்றுமுன் கிடைத்த தகவல் படம் ரீலிஸ் ஆன பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று படத்தின் டைரக்டர் தக்காளி சீனிவாசன். இதனால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார் அம்மு பாரதி. கனல் கண்ணன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் ரீலிஸ் ஆகாமல் இழு இழு என்று இழுத்து வருகிறது. ரீலிஸ் தேதி முடிவு செய்யும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் குறுக்கிட்டு தடையாக இருக்கிறதாம்.
சரி... சற்று முன் கிடைத்த தகவல் என்று பெயரிட்டிருக்கிறார்களே.. படத்தின் கதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இதுதான் கதை.
மனநல காப்பகத்திலிருந்து தப்பித்து ஓடிவரும் கனல் கண்ணன், பாரதி வீட்டில் நுழைந்துவிடுகிறார். தனியாக இருக்கும் அவர் தன்னை அவர் கொன்று விடுவாரோ என்று நடுங்கிக் கொண்டிருக்கும் போது போலீஸ் உடையில் உள்ளே நுழைகிறார் சேது. இவரும் தன் பங்கிற்கு டார்ச்சர் கொடுக்க, இருவரிடம் சிக்கிக் கொண்ட பாரதி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. ஏற்கனவே தமிழில் ஒரு சில த்ரில்லர் படங்களை இயக்கியவர் தக்காளி சீனிவாசன். இதுவும் அதே ரக படம்தான். ஆனால், வெறும் காதலையும், ஆக்ஷனையும் பார்த்து சலித்து போயிருக்கிற ரசிகர்களுக்கு, இந்த ஆக்ஷன் த்ரில்லர் புதிய அனுபவத்தை கொடுக்கும் போலிருக்கிறது.
Labels:
ammu barathi
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!