Super star Rajinikanth in kuselan movie
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஒகேனக்கல் விவகாரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். அவரது பேச்சை தொடர்ந்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு, ரஜினி கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படங்களை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம். எங்களது எதிர்ப்பை மீறி திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ரஜினியில் குசேலன் திரைப்படம் வருகிற 31ம்தேதி திரைக்கு வரவுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் அதே நாளில்தான் குசேலனை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் குசேலன் படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ரஜினியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதனை அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர்கள் வழக்கம்போல கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறார்கள். உருவ பொம்மையை எரித்தவர்கள் சிறிது நேரம் நின்று ரஜினிக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷமிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
ரஜினி உருவபொம்மை எரிக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையில் குசேலன் படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தகர் சங்க தலைவர் டாக்டர் ஜெயமாலா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஜினியிடம் பேசவிருப்பதாகவும் ஜெயமாலா கூறியிருக்கிறார்.
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
"police kaararhal vazhakkam pol kaikatti vedikkai parthukonday irundhirukiraarhal...." arumaiyanadhoru seidhi..makkalukku chera vendiyadhoru vishayam.
Karnatakavil thamizhanukku yedhiraaha yaar yenna seidhaalum kaaval thurai onrum seivadhillai yenbadhu angu pirachanaiyai sandhikkum ouvoru thamizhanum unarndha vishayam.
தங்கள் கருத்துக்கு நன்றி தயா...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!