2008-07-21
கவர்ச்சிக்கு சென்சார் கத்தரி : கண்கலங்கிய இயக்குனர்
மைக் மோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் படம் சுட்டபழம். டைரக்டர் ஜி.கே.வாசன் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுபாபுஞ்சா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தே படைத்திருக்கிறாராம். படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து சென்சார் போர்டின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார்போடு அதிகாரிகள், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக இருக்கின்றன. அவற்றில் எல்லாம் கத்தரி போட வேண்டியிருக்கும் போலிருக்கிறதே... என்று கூறியுள்ளனர். இதனால் டைரக்டர் உள்ளிட்ட மற்ற குழுவினர் கண்கலங்கி விட்டனர். கஷ்டப்பட்டு, நடிகைகளை சம்மதிக்க வைத்து எடுக்கப்பட்ட சீன்களுக்கு கத்தரி போட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்து செய்வதறியாது திகைத்தனர். ஏ சர்டிபிகேட் கொடுத்தாலும் பரவாயில்லை என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து படத்தின் அதிக கவர்ச்சியுள்ள சில காட்சிகள் மீது மட்டும் கத்தரி போட்ட சென்சார் போர்டு அதிகாரிகள், சுட்டபழத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து விட்டனர்.
இதனால் மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ள சுட்டபழம் குழுவினர் தற்போது படத்துக்கு பேட்ஜ் ஒர்க்கை நடத்தி வருகிறார்கள். ஏ சர்டிபிகேட் என்பதால் இளம் ரசிகர்களை இந்த படம் கவரும், கண்டிப்பாக மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார் மைக் மோகன்.
Labels:
Mike mohan
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே...!
//பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக இருக்கின்றன. //
பெரும்'பாலான' காட்சிகள் !!!
:)
சுட்ட பழம் கெட்ட பழமாக இருக்கும் போல இருக்கிறதே.
ஒளவையார் கதையில் வரும் 'சுட்டப்பழம், சுடாதபழம்' என்ற ஒரு சொல்லில் இருந்து தயாரிக்கும் படம் இப்படிப்பட்டதா ? :(
//பெரும்பாலான காட்சிகள் //
பெரும்'பலான' காட்சிகள்னு சொல்லுங்க..
படம் நிச்சயம் அட்டு ப்ளாப்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!