CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-12

முள்ளும் மலரும் பாடல் ரீமிக்ஸ் ஆகிறது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்ற ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல... என்ற பாடல் அந்த காலகட்டத்திலேயே செம போடு போட்டது. பட்டிதொட்டியெங்கும் ஒலித்த இந்த பாடலை எழுதியவர் கங்கைஅமரன். இந்த பாடல் இப்போது ரீமிக்ஸ் ஆகவிருக்கிறது.

மறைந்த முன்னாள் நடிகையும், டி.பி.கஜேந்திரன் தயாரித்து இயக்கும் படம் மகனே என் மருமகனே. (தன்னை வளர்த்த அத்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் முத்துலட்சுமி மூவிஸ் என்று பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி, அத்தையின் வாயில் இருந்து அடிக்கடி வரும் வார்த்தையான மகனே என் மருகமனே என்ற தலைப்பில் டி.பி.கஜேந்திரன் இந்த படத்தை எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த படத்தில் நடிகர் விவேக், நாசர், சரண்யா மற்றும் 3 புதுமுக நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சி வசனத்தில் உருவாகி வரும் இப்படத்தில்தான் படத்தில்தான் ரமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல.. என்ற பாடல் ரீமிக்ஸ் ஆகப்போகிறது. இந்த ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைப்பாளர் தினா இசையமைத்துள்ளார். நடிகர் விவேக்தான் இந்த பாடலுக்கு நடனமாடப் போகிறார்.

கொசுறு தகவல் : ரீமிக்ஸ் பாடல் வரிகளில் சில மாற்றங்களை செய்து கொடுத்திருக்கிறார் கங்கைஅமரன்.

2 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

Considering the fact that it could be more accurate in giving informations.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!