2008-07-12
சூட்டிங் ஸ்பாட்டில் புதுமுக நடிகை எஸ்கேப் - பரபரப்பு
புதுமுக நடிகை ஒருவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
நடிகர் ஜெய்ஆகாஷ் நடித்து வரும் படம் அடடா என்ன அழகு. டைரக்டர் ஜெயமுருகன் இயக்கும் இந்த படத்தை அலிபிரி புரொடொக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. படத்தின் நாயகியாக புதுமுக நடிகை நிக்கோல் நடிக்கிறார். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சினிமா சூட்டிங் பங்களாவான் எம்.வி.எம் பங்களாவில் ஆகாஷ் மற்றும் நிக்கோல் சம்பந்தப்பட்ட காட்சியின் சூட்டிங் நடந்தது.
பிரேக் நேரத்துக்கு பிறகு மீண்டும் சூட்டிங் தொடங்கிய பின்னரும் நிகோல் தனது தாயுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஆகாஷ், உதவி இயக்குனர்களிடம், அந்த பொண்ணை கூப்பிடுங்கள். அவங்க சம்பந்தப்பட்ட காட்சி இருக்கு! என்று சொல்லி விட்டார். இந்த வார்த்தைகள் நடிகையில் தாய் டெபியின் காதில் விழுந்தது. அடுத்த நிமிடமே.. என் பொண்ணை இப்படியா மரியாதை இல்லாமல் கூப்பிடுவது, அவளுக்கு பெயர் இல்லையா என்ன? என்று லபோ திலோவென்று கத்தத் தொடங்கி விட்டார். இதனால் சூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டைரக்டர் ஜெயமுருகன், நடிகையில் தாயாரிடம் மன்னிப்பு கேட்டு நடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் டெபியோ... டைரக்டரின் சமாதானத்தை பொருட்படுத்தாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். இதனால் சூட்டிங் அப்படியே நிற்கிறது.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் செய்யப்பட்டு இருப்பதாக படத்தின் டைரக்டர் ஜெயமுருகன் தெரிவித்தார்.
நடிகை நிக்கோல் மெகா சைஸ் கிளாமர் படத்தை பார்த்து ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.
நிக்கோலின் படுக்கையறை காட்சி தொடர்பான செய்தியை வாசிக்க இங்கெ சொடுக்குங்கள்.
Labels:
nicole,
shooting spot
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
I like your blog.
loans online
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
நான் எஸ்கேப் இன்னதும் என்னவோ எதோ என்று நினைத்தேன் . கடைசியில் சப் என்று ஆகி விட்டது !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
// ARUVAI BASKAR said...
நான் எஸ்கேப் இன்னதும் என்னவோ எதோ என்று நினைத்தேன் . கடைசியில் சப் என்று ஆகி விட்டது !//
Enakkumthan
சூட்டிங் ஸ்பட் போட்டோ போட்டிருக்கிறதும் நல்லா இருக்கு.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!