CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-10

ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்துள்ள படம் குசேலன். ஆரம்பத்தில் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடிக்கவிருந்த ரஜினிகாந்த், கதை பிடித்து விட்டதால் முழுக்க முழுக்க நடித்து முடித்து விட்டார். இதனால் ரசிகர்களிடையே குசேலன் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் குசேலன் படத்தின் பாடல் சி.டி.க்களின் விற்பனை இரண்டரை கோடி ரூபாயை தாண்டி விட்டது. சிவாஜியை மிஞ்சிய ஆடியோ விற்பனை போல பட வெளியீட்டிலும் சிவாஜியை மிஞ்சப் போகிறது. சென்னையில் மட்டும் 15 தியேட்டர்களில் குசேலனை திரையிட முடிவு செய்துள்ளனர். (சிவாஜி படம் 14 தியேட்டர்களில்தான் ரீலிஸ் ஆனது).

ஆகஸ்ட் 1ம் தேதி குசேலன் ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில், குசேலன் படம் ரீலிசின்போது ரசிகர்கள் கொடி, தோரணம், பாலாபிஷேகம் போன்ற எந்த உற்சாக நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அதில் செலவழக்கும் தொகையை கஷடப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான கடிதம் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பப்படவிருக்கிறது.

6 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

யாத்ரீகன் said...

lets see how many ppl do this ;-)

நாமக்கல் சிபி said...

//இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!//

இந்த செய்திக்கு மிக்க நன்றி!

naren said...

oddana kettututan maru vealli

Anonymous said...

இந்த விசயத்தில மட்டும் தலைவர் பேச்ச கேக்க மாட்டோம்.

Anonymous said...

கேக்க மாட்டோம் கேக்க மாட்டோம் கேக்க மாட்டோம் தலைவர் பேச்ச கேக்க மாட்டோம்.

:-)

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!