2008-07-09
நடிகை சதா கடத்தல்? : மும்பையில் பரபரப்பு
நடிகை சதா கடத்தப்பட்டதாக பாலிவுட் திரை உலகில் பரபரப்பு நிலவுகிறது.
ஜெயம் படத்தில் போய்யா... போ... என்று கைகளை நீட்டி நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சதா. இவருக்கு தமிழில் அந்நியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது தமிழில் வேறு படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் மும்பை பக்கம் கரை ஒதுங்கினார்.
இந்நிலையில்தான் நடிகை சதா கடத்தப்பட்டுவிட்டதாக நேற்று மாலை முதல் மும்பையில் பரபரப்பு நிலவுகிறதாம். இதுபற்றியறிந்ததும் சதாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் சதாவின் தந்தை சையதுவிடம் போனில் கேட்டோம். அதற்கு அவர் ஆக்ரோஷத்துடன் பதில் அளித்தார். அவர் கூறுகையில், இன்னிக்கு காலையில இருந்தே நிறையபேர் போன் பண்ணி கேட்கிறாங்க. சதா இப்போ இந்தியில் பிஸியாக இருக்கிறார். க்ளிக் உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். அவரது புகழை கெடுக்க யாரோ சதி செய்து புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்றார்.
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Labels:
sadha
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
//இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!//
!?
எங்களுக்கென்ன தெரியும் இதைப் பத்தி?
//அவரது புகழை கெடுக்க யாரோ சதி செய்து புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்//
இப்படீன்னு.. அவங்க அப்பாவே சொல்லிட்ட பின்னாடி..
நீங்கள் ஏன் இன்னும் புரளியைக் கிளப்புகிறீர்கள்? உங்கள் தலைப்பு விவகாரமாகத் தானே இருக்கு..
அவங்க கலையுலகத்திலே இருக்காங்க என்பதற்காக அவங்களின் தனிமையைப் பறிக்காதீர்கள்..
//நாமக்கல் சிபி said...
//இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!//
!?
எங்களுக்கென்ன தெரியும் இதைப் பத்தி?//
தள,
ஃபுல் ஃபார்ம் போல :-))
ஆமா! அப்படியே கடத்திட்டாலும்...
:))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!