CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-04

குசேலன் விழாவுக்கு வராததுக்கு காரணம் இருக்கு : பசுபதி


குசேலன் விழாவுக்கு வராதததுக்கு காரணம் இல்லாமல் இல்லை என்று நடிகர் பசுபதி கூறியுள்ளார்.

குசேலன் படத்தில் பசுபதி புறக்கணிக்கப்பட்டதுதான் அவர் விழாவில் பங்கேற்காததுக்கு காரணம் என்று தமிழ் சினிமா உலகில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பசுபதியாகவே பத்திரிகையாளர்களை தொடர்புகொண்டு தன்னிலை விளக்கம் அளித்து வருகிறார். நம்மிடம் பசுபதி கூறியதாவது:-

குசேலன் ஆடியோ விழாவுக்கு பசுபதி வராததற்கு ஏதோ காரணம் உள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி எழுதுகிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை. குசேலன் ஆடியோ விழாவன்று நான் மூணாறில் இருந்தேன். எனக்கு அடுத்தடுத்து நிறைய படங்கள் வருகின்றன என்பதால் முதலில் தொடங்கிய வெடிகுண்டு முருகேசன் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் வரமுடியவில்லை, என்றார்.

உங்கள் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படும் குசேலன் படத்தின் விழாவுக்கு வராமல் இருக்க எப்படி மனம் வந்தது? என்று ஒரு குறுக்கு கேள்வியை போட்டோம். அதற்கு பசுபதி, என்னுடைய சாதனை இதுமட்டுமல்ல. நான் இந்த திரையுலகில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது, என்றார் ஒருவித காட்டத்துடன். (அவர் என்ன நினைத்து அப்படி சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.)

இதே பசுபதிதான் குசேலனில் வாய்ப்பு கிடைத்தபோது, ரஜினியுடன் ரஜினியின் நண்பராக நடித்தது எனது சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் என்று பெருமிதப்பட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!

ஜோசப் பால்ராஜ் said...

அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளாததே நல்லது. பசுபதி ஒரு நல்ல நடிகர். கத பறயும் போழ் கதையை அப்படியே எடுத்திருந்தால், பசுபதிதான் அதில் முக்கியமாக பேசப்படும் பாத்திரமாக இருந்திருப்பார். ஆனால் இங்கு ரஜினியின் புகழை மட்டுமே நம்பி, அந்த நல்ல படத்தின் வலுவான கதையக் கூட நம்பாமல் கொலைசெய்ததற்குப் பதில் ஏதாவது ஒரு தெலுங்கு மசாலா கதையை எடுத்து இதை செய்திருக்கலாம். விஜய் எவ்வளோ மேல்.ரஜினி இனியாவது இது போன்ற நல்ல கதைகளில் நடித்து, அந்த கதையை கொலைசெய்வதை விட்டுவிடலாம். அவர் எந்த கதையில் நடித்தாலும் பார்க்க ஆள் இருக்கும் போது எதற்கு இப்படி ஒரு நல்ல கதையை எடுத்து அதை கொல்ல வேண்டும்?

Samuthra Senthil said...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜோசப் பால்ராஜ் அவர்களே...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!