CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-31

நடிகை நிலா EXCLUSIVE HOT GALLERY

சினிமா நிருபர் டாட் காம் வழங்கும் நடிகை நிலாவின் எக்ஸ்குளுசிவ் கேலரியை இங்கே வெளியிடப்பட்டுள்ளது. படங்களை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்து விட்டு டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே..!

Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery
Actress Nila Hot Gallery

தேன்கூட்டில் சினிமா நிருபர்

நிருபர் வலைப்பூவை தொடங்கி கடந்த 3 மாதங்களில் இதுவரை 327 பதிவுகளை பதிவிட்டிருக்கிறேன். இது 328வது பதிவு. வலைப்பூ தொடங்கிய நாள் முதல் எனது வலைப்பூவை தேன்கூட்டில் இணைக்க முயற்சித்து வந்தேன். ஒருவழியாக நேற்று முதல் எனது பதிவுகளை தேன்கூடு தளமும் திரட்டத் தொடங்கி விட்டது. சினிமா நிருபர் வலைப்பூவின் பதிவுகளை திரட்டும் தேன்கூட்டிற்கு எமது மனமார்ந்த நன்றியினை சொல்லிக் கொள்கிறோம். அதேபோல் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் வாசகர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகை SHEELA மெகா சைஸ் வால்பேப்பர்

சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை SHEELA. வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
Tamil Actress Sheela wallpaper

தசாவதாரத்தில் கதையே இல்லை : பாரதிராஜா குற்றச்சாட்டு


Director Barathi raja
தசாவதாரம் படத்தில் கதையே இல்லை என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

கிராமத்து பாணி படங்களை எடுத்து புகழ்பெற்ற டைரக்டர் பாரதிராஜா கேரள மாநிலம் திருச்சூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்ததார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில், தென்னிந்திய மொழி சினிமாக்களில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து ஒரு நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பாரதிராஜா, இப்போது வரும் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நல்ல கதைகள் இல்லை என்றுதான் நான் சொல்வேன். புதிய எண்ணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கதையை விட்டு விட்டு தொழில்நுட்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சமீபத்தில் வெளியான கமலின் தசாவதாரம் படத்தையே இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை கமலே ஒப்புக் கொண்டிருக்கிறார், என்று சொன்னார்.

இதற்கு காரணம் யார்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, கதை எழுதுபவர்கள் எல்லாம் இயக்குனர்களாக மாறியதுதான் காரணம் என்றார். அதேநேரத்தில் இயக்குனர்களின் முக்கியத்துவம் குறைந்து சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதும் இதற்கு காரணம் என்று சொல்லலாம். அதிலும் முன்னணி நடிகர்கள் தங்களுக்கு வசதியான, பஞ்ச்களை வைக்கச் சொல்லி நச்சரிக்கிறார்கள் என்றும் பாரதிராஜா கூறினார்.

சினிமா கிசுகிசு

பிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான்.

அந்த நடிகைக்கு கவர்ச்சி காட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவதுபோன்றதுதான். எள் என்றால் எண்ணையாக இருப்பார். நயன்தாராவே டூ பீஸ் உடையில் நடித்து விட்ட பிறகு, இந்த மழை நாயகி மட்டும் மறுப்பாரா என்ன? அவர் நடித்து வரும் ஒரு படத்தின் சூட்டிங் சமீபத்தில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. அங்குள்ள நீச்சலடிப்பது போன் காட்சியை படமாக்க திட்டமிட்ட இயக்குனர், டூ பீஸ் உடையில் வருமாறு கூறினார். உடை மாற்றும் அறைக்கு சென்ற அம்மணி, அடுத்த நொடியே டூ பீஸில் ரெடி. சூட்டிங் தொடங்கியது. முதல் டேக் முடிந்து இரண்டாவது டேக் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அம்மணியின் டூ பீஸில் ஒரு பீஸ் அவிழ்ந்து விட்டதாம். அவிழ்ந்த பீஸ் ஆடையை எடுக்க முயலுவதற்குள் அது எங்கோ சென்று விட்டது. இதையடுத்து அம்மணி கூச்சல் போட்டு வேறு உடையை கொண்டு வரச் சொன்னார். பின்னர் தண்ணீருக்குள்ளேயே வைத்து உடைமாற்றிக் கொண்டு கரையேறியுள்ளார்.

மேலே வந்த அம்மணி, முதல் டேக்கில் எடுத்த காட்சியை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது டேக் வெளிவந்துவிடக்கூடாது என்று ஒரு அதிரடி உத்தரவை போட்டு விட்டு மீண்டும் உடைமாற்றும் அறைக்குள் புகுந்து கொண்டாராம். அம்மணியின் அரை நிர்வாண காட்சியை ஏராளமானவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் அம்மணியோ... வெளிநாட்டுல இதெல்லாம் சகஜம்பா... என்கிற ரீதியில் எதையுமே கண்டு கொள்ளவில்லையாம். (சினிமா சூட்டிங்கிலயும் இதெல்லாம் சகஜம்தானே அம்மணி...?)

2008-07-30

அஜித்-ஷாலினியின் மகள் க்யூட் கேலரி :EXCLUSIVE

அஜித்குமார் - ஷாலினி தம்பதியரின் அழகான பெண்குழந்தை அனோஷ்கா. பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனோஷ்காவை எடுத்து வருவதை தவிர்த்து வந்த இந்த நட்சத்திர தம்பதியர், சமீபகாலமாக குழந்தையுடன் சென்னை நகரை வலம் வரத் தொடங்கியுள்ளனர். வீட்டுக்குள்ளேயே இருப்பது அனோவுக்கு பிடிக்கவில்லை, காரில் எங்காவது வெளியே அழைத்து சென்றால் சந்தோஷமாக இருக்கிறாள் என்று சொல்கிறார் அஜித். பேபி அனோஷ்காவில் க்யூட் கேலரி உங்களுக்காக...! பார்த்து ரசித்து விட்டு பேபி அனோஷ்காவை வாழத்துங்கள் நண்பர்களே...!

Ajith - Shalini’s Daughter Anuoksha

Ajith - Shalini’s Daughter Anuoksha

Ajith - Shalini’s Daughter Anuoksha

Ajith - Shalini’s Daughter Anuoksha

நடிகை NAMITHA மெகா சைஸ் வால்பேப்பர்

சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை NAMITHA. வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

Hot Actress Namitha Wallpaper

குசேலனுக்காக ரஜினி எழுதிய கடிதம் : முழுவிவரம்

குசேலன் படம் வெளியாவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கன்னட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருக்கிறார்.

Super star rajinikanth in kuselan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் குசேலன் படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கர்நாடக ரக்ஷண வேதிகே அசைப்பு போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் குதித்துள்ளது. குசேலன் திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிராக பேசியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் வேதிகே அமைப்பினரின் கோரிக்கை. குசேலனுக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையிலும் கர்நாடகாவில் குசேலன் திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் திரையிட தடை இல்லை என்று கன்னட பிலிம்சேம்பர் அறிவித்தது. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தும், கன்னட பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட. ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் துணைத்தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறாரே தவிர, வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குசேலனுக்கு தடையில்லை என்றதும் கர்நாடகாவில் வாழும் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். பெங்களூருவில் குசேலன் 17 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல தெலுங்கு குசேலன் படமான குசேலடுவும் கணிசமான தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது.

மர்மயோகியில் நயன்தாரா..! : இது லேட்டஸ்ட் தகவல்


Nayanthara in marma yoghi
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் மர்மயோகி படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் தேதி கேட்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

மர்மயோகி படத்தின் கதைக்கரு உள்ளிட்ட விஷயங்களை வெளிப்படையாக சொல்லி வரும் கமல்ஹாசன், நாயகி விஷயத்தை மட்டும் வெளியில் சொல்லமுடியாமல் இருக்கிறார். இதற்கு காரணம் தான் எதிர்பார்க்கும் நாயகிகள் யாரும் கால்ஷீட்டை உறுதிபடுத்தாததுதான். முதலில் ராணி முகர்ஜியிடம் கேட்டார். பின்னர் கஜோலிடம் கேட்டார். இவர்கள் இருவருமே தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்களாம். இந்நிலையில் தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையான நயன்தாராவிடம் நடிகர் கமல்ஹாசன் தேதி கேட்டிருக்கிறாராம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நயன்தாராவும் உறுதியான பதில் சொல்லமல் இருப்பதுதான். தற்போது டாப் இடத்தில் இருக்கும் நயன்தாரா இப்போது இளம் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கால்ஷீட் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நயன்தாரா கமல்ஹாசனிடம் எனது தேதிகளை பார்த்துவிட்டு சொல்கிறேன் என்ற பதிலை மட்டும் சொல்லியிருக்கிறார். இதுபற்றி நயன்தாராவை தொடர்பு கொள்ள முயன்றோம். முடியவில்லை. ஆனால் கமல்ஹாசன் போனில் பேசியது உண்மை. நயன்தாராவிடம் இப்போது தேதிகள் எதுவும் இல்லை. அதனால் யோசித்து வருகிறார். மற்றபடி கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது நயன்தாராவின் நீண்ட நாள் ஆசை என்று அவரது அலுவலகத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.

பெட்டில் இருந்து தவறி விழுந்து காலை உடைத்துக் கொண்ட நடிகை

நடிகை நிக்கோல் பெட்டில் இருந்து தவறி விழுந்து காலை உடைத்துக் கொண்டார். இதில் சதி நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Actress Nicole in adada enna alazhu movie
நடிகை நிக்கோல் தற்போது ஜெய் ஆகாஷ¨டன் அடடா என்ன அழகு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இவர் ஜெய் ஆகாஷ் அநாகரிகமாக பேசுவதாக புகார்கூறி விட்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆனார். இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் நிக்கோல். ஜெய் ஆகாஷ¨டன் ஏற்பட்ட மோதலில் சமாதானம் ஆன நிக்கோல், தற்போது ஊட்டியில் நடக்கும் அடடா என்ன அழகு சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். படத்தின் கதைப்படி நடிகை நிக்கோல் மருத்துவமனையன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது எதிர்பாராத விதமாக பெட்டில் இருந்து தவறி விழுவார். பொதுவாக இப்படிப்பட்ட காட்சி எடுக்கும்போது தரையில் ஒரு மெகா சைஸ் பெட் போட்டிருப்பார்கள். இந்த சூட்டிங்கிலும் பெட் போடப்பட்டிருந்ததாம். ஆனால் நிக்கோல் விழுவது போன்ற காட்சியை எடுத்தபோது பெட் மாயமிகி விட்டதாம். இதனால் பெட்டில் இருந்து கீழே விழுந்த நிக்கோலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில்சதி இருக்கிறது, அது யார் செய்த சதி என்று எனக்கு தெரியும் என்று சகட்டு மேனிக்கு ஜெய் ஆகாஷை சாடை மாடையாக திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறாராம் நிக்கோல்.

2008-07-29

இவரை தெரியுதா உங்களுக்கு?

படத்தில் குங்கும பொட்டு வைத்து புன்னகைக்கும் இவர் யார் என உங்களுக்கு தெரிகிறதா? தெரிந்தால் பின்னூட்டத்தில் பதில் சொல்லுங்களேன் நண்பர்களே...!

டைரக்டர் கைவிரித்ததால் நடுரோட்டில் தவித்த நடிகை

டைரக்டர் ஒருவர் கைவிரித்ததால் புதுமுக நடிகை ஒருவர் நடுரோட்டில் தவியாய் தவித்தார்.

டைகர்டர் சந்திரகுரு இயக்கி வரும் படம் ஐம்புலன். இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷின் மகன் தமிழ் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த நடிகை மிருதுளாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த நடிகைதான் டைரக்டர் ஏமாற்றியதால் நடுரோட்டில் தவித்தேன் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்ய தயாராகி வருகிறார்.

என்ன டைரக்டர் ஏமாற்றிட்டாரா? என்ற ஒரேயரு கேள்வி கேட்டதற்கு பட்டாசாய் பதில்களை உதிர்த்தார் மிருதுளா. ஆவேசம் பொங்க அவர் சொன்ன தகவல்கள் வருமாறு:
Actress miruthula in aympulan movie

போன வருஷமே ஐம்புலன் படத்துக்கு பூஜை போட்டாங்க. இந்த படத்துக்காக என்னிடம் 3 மாதம் தொடர்ந்து கால்ஷீட் கேட்டார்கள். நானும் 3 மாதம் கால்ஷீட் கொடுத்தேன். ஆரம்பத்தில் தொடர்ந்து 15 நாட்கள் சூட்டிங் நடந்தது. அதன் பிறகு சூட்டிங்கை தள்ளி வைத்திருப்பதாக கூறினார்கள். நானும் என் சொந்த ஊருக்கு போய் விட்டேன். அதன் பிறகு அவ்வப்போது டைரக்டர் சந்திரகுருவிடம் போனில் பேசுவேன். அவர் சரியான தகவல் எதுவும் சொல்லாததால் நான் வேறு படங்களில் கமிட் ஆனேன்.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் அவர் போன் செய்து, ஈரோட்டில் சூட்டிங் வைத்திருக்கிறோம். வந்துவிடுங்கள் என்று கூறினார். நானும் சரியென கூறி, என் அம்மாவுடன் ரெயிலில் ஈரோடுக்கு வந்தேன். ஆனால் அவர்கள் சொன்ன இடத்தில் யாருமே இல்லை. இதையடுத்து டைரக்டருக்கு போன் செய்தேன். பதில் இல்லை. என்ன ஆனது என்றும் எங்களுக்கு தெரியவில்லை. நானும் என் அம்மாவும் ஈரோட்டில் திக்குதெரியாமல் தவித்தோம். அதன் பின்னர் கேரளாவில் உள்ள என் அப்பாவுக்கு போனில் விஷயத்தை தெரிவித்தோம். அவர் வந்து எங்களை அழைத்து சென்றார்.

நடந்த உண்மை இதுதான். ஆனால் டைரக்டர் சந்திரகுரு நான் அதிகமாக சம்பளம் கேட்டதாகவும், அதனால் என்னை படத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் கூறியிருப்பதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆனால் என்னிடம் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை. தேவையில்லாமல் என்னை ஈரோடு வரவழைத்தது ஏன்? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுபற்றி நடிகர் சங்கத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறேன்.

இவ்வாறு மிருதுளா கூறினார்.

கேரளத்து பைங்கிளி மிருதுளாவுக்கு பதிலாக புதுமுக நடிகை தென்றலை ஐம்புலன் படத்தில் நியமித்திருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்.

ரஜினிகாந்த் பொது விழாவில் பங்கேற்காதது ஏன்?

Super star rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் பொது விழாவில் பங்கேற்காததற்கு காரணத்தை தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு சினிமா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த் இதனை தெரிவித்தார்.

தெலுங்கு நடிகர் அருண்குமார், நடிகை சினேகா நடிக்கும் ஆதிவிஷ்ணு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் ஒரு சிறந்த பேச்சாளன் கிடையாது என்று பேசியபடியை தனது பேச்சை ஆரம்பித்தார். மேலும் அவர் பேசியதாவது:

பொதுவா நான் பெரும்பாலும் பொதுவிழாக்கள்ல பங்கேற்பதயும், பேசுறதையும் தவிர்ப்பேன். நான் ஏதாவது ஒரு விஷயத்தை பேசினா... அது வேற மாதிரியா மாறிடுது. அது பெரிய பிரச்னையா இருக்கு. நான் பெரிய பேச்சாளனும் இல்ல. அதுக்கான தெறமையும் என்கிட்ட இல்ல. நடிகர் அருண்குமார், நண்பர் தசரி நாராயணாவின் மகன். இந்த நேரத்துல தாசரி நாராயணா பத்தி ஏதாவது சொல்லியாகணும். இருபது, இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் மும்பையில்... அப்போ அது பாம்பே.. ஒரு இந்தி பட சூட்டிங்குல இருந்தேன். இந்தி வசனங்களை தெலுங்குல எழுதி வைத்துக்கொண்டு படிப்பேன். அப்போ 15 நிமிஷத்துல பேச வேண்டிய வசனத்த ஒரே டேக்குல முடிச்சேன். நேரத்தை சிக்கனப்படுத்துற இந்த டெக்னிக் என்னோடது இல்ல... தாசரி நாராணயனுடையது. அருண்குமார் வளரும் கலைஞர். அப்பாவிடம் நிறைய விஷயம் இருக்கு. அதயெல்லாம் கத்துக்கிட்டாலே போதும். பெரிய ஆளாயிடலாம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

நடிகை ப்ரியாமணி மெகா சைஸ் வால்பேப்பர்

சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை ப்ரியாமணி. வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
Tamil Actress Priyamani wallpaper

சுல்தான் விவகாரம் : கண்ணீர் வடிக்கும் இலியானா

Super star rahinikanth, sultan, Actress Iliyana
சுல்தான் படத்தின் வாய்ப்பை மறுத்ததற்கு பல்வேறு வதந்தியை கிளப்பி விட்டதால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை இலியானா.

தெலுங்கில் த்ரிஷாவுடன் போட்டி போடும் அளவுக்கு மார்க்கெட் உயர்ந்த நடிகை இலியானாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியர் படத்தில் நடிக்க கூப்பிட்டதாகவும், கேட்ட சம்பளம் கொடுக்காததால் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என்று பட வுட்டுகளிலும் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. இந்த துணிச்சலான முடிவை திரையுலகை சேர்ந்த சிலர் பாராட்டினாலும், பலர்... சூப்பர் ஸ்டார் படத்துக்கே நோ சொல்லிட்டியேம்மா... என்று ஆதிகாலத்து பாட்டி ரேஞ்சுக்கு அட்வைஸ் பண்றாங்களாம்.

இதுபற்றி இலியானாவிடம் கேட்டால் ஏக கடுப்பாகி விடுகிறார். தமிழ்சினிவுல மட்டும்தான் இப்படியெல்லாம் இருக்குதுன்னு நினைக்கிறேன். படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே எப்படியெல்லாம் வதந்தியை கிளப்பி விடுறாங்க. சுல்தான் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டேன் என்பதெல்லாம் வதந்தி. என்னுடைய மார்க்கெட் ரேஞ்ச் எனக்கு நன்றாகவே தெரியும். அதோடு நான் இப்போ தெலுங்கு படத்துல கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். ரஜினியுடன் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக என்ன செய்ய முடியும்? பேசித் தள்ளுகிறார்.

கமல்ஹாசனுக்கு கஜோல் போட்ட கண்டிஷன்

Marama yohi, Bollywood Actress Kajol
தசாவதாரம் வெற்றியைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹசன் அடுத்து தானே இயக்கி, நடிக்கும் மர்மயோகி படத்துக்கான வேலைகளில் இறங்கி விட்டார். படத்தின் தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து தசாவதாரம் போல் அல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்துள்ள கமல்ஹாசனுக்கு சரியான நாயகி இன்னமும் கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மை.

படத்தின் நடிகை பத்மப்ரியாவுக்கு முக்கியமான கேரக்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கமலுக்கு ஜோடி அல்ல. தனக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கஜோலை அணுகியுள்ளார் கமல். முதல் நாள் சரி.. ஓ.கே. என்று நல்ல தகவலை சொன்ன கஜோல் அடுத்த நாளே... கமல்ஹாசனுக்குபோன் போட்டு குட்டையை குழப்பி விட்டார். மர்மயோகியில் நடிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஒரு சின்ன பிரச்னை. என்னால் என் மகளை பிரிந்திருக்க முடியாது. அதனால் வெளிநாட்டு சூட்டிங் இல்லாமல் இந்தியாவுக்குள்ளேயே சூட்டிங்கை வைத்தால் கண்டிப்பாக நடித்துக் கொடுக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன கமல்ஹாசன் பதில் எதுவும் சொல்லாமல், சரி... பார்ப்போம் என்று மட்டும் சொல்லி இணைப்பை துண்டித்து விட்டாராம். காரணம் படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகள் சுவீட்சர்லாந்தில் எடுக்கப்படவிருக்கிறதாம். இதற்கிடையில் கஜோலின் தங்கை நடிகை தனிஷா... நான் ரெடியா இருக்கிறேன் என்று பச்சைக் கொடி காட்டி எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் தகவல் பறக்கிறது. (மர்மயோகின்னு பேரு வெச்சாலும் வெச்சாலு மர்மமாகவேத்தான் இருக்குங்க...!)

2008-07-28

காஜல் அகர்வால் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்

சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை காஜல் அகர்வால். வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே..!

Actress Kajalagarwal Exclusive Wallpaper

ரஜினி உருவபொம்மை எரித்ததால் பரபரப்பு


Super star Rajinikanth in kuselan movie
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒகேனக்கல் விவகாரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். அவரது பேச்சை தொடர்ந்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு, ரஜினி கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படங்களை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம். எங்களது எதிர்ப்பை மீறி திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினியில் குசேலன் திரைப்படம் வருகிற 31ம்தேதி திரைக்கு வரவுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் அதே நாளில்தான் குசேலனை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் குசேலன் படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ரஜினியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதனை அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர்கள் வழக்கம்போல கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறார்கள். உருவ பொம்மையை எரித்தவர்கள் சிறிது நேரம் நின்று ரஜினிக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷமிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

ரஜினி உருவபொம்மை எரிக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையில் குசேலன் படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தகர் சங்க தலைவர் டாக்டர் ஜெயமாலா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஜினியிடம் பேசவிருப்பதாகவும் ஜெயமாலா கூறியிருக்கிறார்.

1159- இதுதான் லேட்டஸ்ட் ஹிட்


நேற்று (27/07/08) ஒரே நாளில் நிருபர் வலைப்பூவை 1159 வாசகர்கள் பார்த்து சென்றுள்ளனர். இந்த வாசக நண்பர்கள் திறந்து பார்த்து படித்த பக்கங்களின் எண்ணிக்கை 6550. எமது வலைப்பூவை தொடர்ந்து ரசிக்கும் வாசக நண்பர்களுக்கும், புதிதாக வரும்வாசக நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்ளும் இந்நேரத்தில் ஒரு சிறிய வேண்டுகோளையும் முன் வைக்க விரும்புகிறேன். தாங்கள் படிக்கும் செய்தி குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். அல்லது நிருபர் வலைப்பூவில் வேறு என்ன மாதிரியான செய்திகள், படங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்பதையாவது ஒரு ஆலோசனையாக தெரிவித்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மிக்க நன்றி...!

மர்மயோகியில் ரங்கராஜன் நம்பி கேரக்டர் : புது தகவல்

Actor Kamal hasan, marma yogi, dasavatharam
உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள படம் மர்மயோகி. இந்த படத்துக்கு ரூ.120 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் திரையுலகின் பல வசூல் சாதனைகளையும் முறியடித்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் தசாவதாரம் படத்தில் அனைவரையும் கவர்ந்த கேரக்டர் ரங்கராஜன் நம்பி. இந்த கேரக்டர் 12ம் நூற்றாண்டில் உள்ள கேரக்டர். பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்திழுந்த இந்த கேரக்டரை தனது அடுத்த படத்தில் இணைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தான் இயக்கி, நடிக்கவிருக்கும் மர்மயோகி படம் கி.பி. 7ம் நூற்றாண்டை அடிப்படையாக கொண்ட படம் என்று ஏற்கனவே கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் 12ம் நூற்றாண்டு ரங்கராஜன் நம்பியை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக இப்போது தகவல்கள் கசிந்துள்ளன.

மர்மயோகி படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி என்பது கொசுறு தகவல்.

டவுட் தங்கபாலு : (தசாவதாரம் படத்தின் மூலம் கெடச்ச பணத்தயெல்லாம் மர்மயோகியில போட்டுருவாரோ...?)

கமாலினி முகர்ஜி செம ஹாட் ஸ்டில்ஸ்

சினிமா நிருபர் டாட் காம் வழங்கும் ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை கமாலினி முகர்ஜி. கமாலினி முகர்ஜியின் படங்களை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்து, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

Actress Kamalini Mugarji hot stills
Actress Kamalini Mugarji hot stills
Actress Kamalini Mugarji hot stills
Actress Kamalini Mugarji hot stills
Actress Kamalini Mugarji hot stills

2008-07-27

காதல் சந்தியா எக்ஸ்குளுசிவ் வால்பேப்பர்

சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் காதல் நடிகை சந்தியா. வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
Kadal santhiya kathal sandhiya Kadal santhiya kathal sandhiya

நமீவோட சொந்தக் குரலை கேட்கணுமா?

Indra vizha Actress Namitha Hot still
நடிகை நமீதாவின் சொந்தக்குரலை கேட்டும் வாய்ப்பு அனைத்து ரசிகர்களுக்கும் கிடைக்கப்போகிறது.

ஆம் நண்பர்களே..! நமீதா தற்போது நடித்து வரும் இந்திரவிழா படத்தில் நமீதாவை சொந்தக்குரலில் பேச வைக்கப் போகிறாராம் படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர். இதுபற்றி நமீதாவிடம் கேட்டபோது, ஆமாங்கண்ணா... நா என்னோட வாய்ஸ் இந்ட்ரவிலா படத்துலோ குடுக்கப்போறேன், என்கிறார் மழலைதமிழில். டைரக்டர் ராஜேஷ்வர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திரவிழா பிரமாணடமாக உருவாகி வருகிறது. படத்தில் நமீதாவுக்கு முக்கியமான கேரக்டர். தமிழ்சினிமாவில் பொதுவாக நடிகர்கள் மட்டுமே சொந்தக்குரலில் பேசுகிறார்கள். நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இனிமையான குரல் இல்லை என்று கூறி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதை எதிர்ப்பவன் நான். இப்போது நமீதாவுக்கு கூட சரியாக தமிழ் வராது என்று சிலர் கூறுகிறார்கள். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டா பிறந்தோம். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் தப்பே இல்லையே. நமீதாவுக்கு தமிழ் நடிகை என்ற முத்திரை கிடைத்து விட்டது. அவரும் தமிழ் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அதனால்தான் இந்த முடிவு, என்றார்.

பருத்தி வீரன் படத்தில் ப்ரியாமணி சொந்தக்குரலில் பேசியதால்தான் அவருக்கு நிறைய விருதுகள் கிடைத்தன என்பது நினைவு கூறத்தக்கது.

இத படிங்க மொதல்ல... (கதையல்ல நிஜம்)

அனுப்புனர் : சினிமா நிருபர்,


பெறுனர் : வாசக நண்பர்கள்,
நிருபர் வலைப்பூ.

(பொருள் : சினிமா நிருபர் வலைப்பூவின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு)

அன்பு வாசக நண்பர்களே...!

வணக்கம்.

நிருபர் வலைப்பூ உருவான விதம் பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகளில் சொல்லி விட்டேன். வலைப்பூ ஆரம்பித்த புதிதில் 10 ஆயிரம் வாசகர்கள் பார்த்ததை ஒரு பதிவாக போட்டிருந்தேன். அதன் பின்னர் 20 ஆயிரம் வாசக நண்பர்கள் பார்த்ததை பதிவாக போட்டிருந்தேன். இப்போதும் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் வாசக அன்பர்களுக்கும், நான் வலைப்பூ தொடங்க காரணமாக இருந்த அன்பர்களுக்கும், தற்போது வலைப்பூவுக்கு செய்தி மற்றும் புகைப்படம் கொடுத்து வரும் அன்பர்களுக்கும், தொழில்நுட்ப ஆலோசனை கூறும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் விதமாகத்தான் இந்த பதிவை போடுகிறேன்.

ஆம். வாசக நண்பர்களே...! நிருபர் வலைப்பூவை நேற்று (26/07/08) மட்டும் 982 பேர் பார்த்து சென்றுள்ளனர். இந்த வாசகர்கள் நேற்று படித்த பக்கங்களின் எண்ணிக்கை 4617. (ஆதாரம் ஹிஸ்டாட்ஸ் டாட் காம்) ஒரே நாளில் குறைந்தது ஆயிரம் பேரையாவது எனது பதிவுகள் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய லட்சியமாக இருந்து வருகிறது. அதற்கு பறைசாற்றும் வகையில் நேற்றைய தினம் ஏராளமான வாசக நண்பர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

எத்தனையே அனானி கமெண்ட்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், சினிமா நிருபரையும், சினிமாநிருபர் வலைப்பூவையும் தவறாக சித்தரித்தும் வந்தன. அவற்றையெல்லாம் நான் என்றுமே பொருட்படுத்தாததும் எனது இந்த வெற்றிக்கு காரணம் என்றே நான் கருதுகிறேன். (982 பேர் பார்த்ததெல்லாம் சாதனையா என்று யாராவது கேட்டால்... அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது... என்னைப் பொறுத்தவரை இதனை வெற்றியாகவே கருதுகிறேன்.)

வலைப்பூ ஆரம்பித்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் பார்ப்பதையே வெற்றியாக நினைதேன். அதன் பின்னர் 300 பேர் இப்போது ஆயிரத்தை நெருங்குகிறது. இது இப்படியே நிலைத்திருக்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்கிற ரீதியில் தொடர்ந்து செய்திகளை நல்ல முறையில் ஆபாச கலப்பின்றி வெளியிடுவேன், வாசக நண்பர்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...!

புதிதாக உதயமாகவுள்ள சினிமா நிருபர் டாட் காம் தளத்தில் அதிக அளவிலான செய்திகள், ஸ்டில்களை கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி...!


இப்படிக்கு
என்றென்றும் அன்புடன்
சினிமா நிருபர்.

இது ரஜினியின் பெருந்தன்மையா?


kuselan rajini kuselan rajini kuselan rajini kuselan rajini
மலையாளத்தில் வெளியான கத பறயும் போல என்ற படம் தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் குசேலடு என்ற பெயரியும் எடுக்கப்பட்டுள்ளதுபோல இந்தியில் பில்லோ பார்பர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஷாரூக் கான்தான் சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்து வருகிறார்.

தமிழிலும், தெலுங்கிலும் குசேலனை எடுத்துள்ள குசேலன் குழுவினர், இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். குசேலன் ஆகஸ்ட் 1ம் தேதி உலகமெங்கிலும் ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் இந்தி டப்பிங் குசேலனையும் வெளியிடத் தயாராகி வருகிறார்கள். இந்த செய்தியை அறிந்த ஷாரூக் கான் ரொம்பவே கலங்கி விட்டாராம். டப்பிங் குசேலன் வந்தால் ரீமேக் குசேலனின் (பில்லோ பார்பர்) கதி என்னவாகும் ன நினைத்து வருந்திய அவர் ரஜினியிடம் போன் செய்து, தங்களது படத்தை இப்போது வெளியிட்டால், எனது பில்லோ பார்பர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போகும். தயவு செய்து பில்லோ பார்பரை வெளியிட்ட பிறகு வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

சரி... இதுபற்றி யோசித்து விட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்த ரஜினிகாந்த், அடுத்த சில நிமிடங்களில் ஷாரூக்கிற்கு போன் செய்து நீங்கள் சொன்னபடியே செய்கிறேன், என கூறி விட்டாராம். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஷாரூக், ரஜினியின் புகழ்பாடத் தொடங்கியிருக்கிறார். ரஜினி சார்தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று அவர் மும்பையில் வெளியாகும் பத்திரிகையன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார்.

மேலும் பில்லோ பார்பர் படத்தின் ஒரு காட்சியில் ஷாரூக்கானும், ரஜினிகாந்தும் சந்திப்பது போன்ற காட்சியை எடுத்த முடிவு செய்துள்ள ஷாரூக், அதுபற்றியும் ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இன்னும் பாசிட்டிவான பதில் வரவில்லை என்கிறார் ஷாரூக்.

2008-07-26

ஹோம்லி நாயகியின் கிளாமர் ஸ்டில் எடுக்க போட்டோகிராபர் படும்பாடு


Actress Saloni actress saloni actress saloni
நண்பர் முரளிகண்ணன் அவர்கள் தமது வலைப்பூவில், தாவணியின் சக்தி என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த தாவணி பதிவை பார்த்ததும் நடிகைகளை கிளாமராக படம் எடுக்க போட்டோகிராபர்கள் படும் பாட்டை ஒரு பதிவாக போடலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. பதிவையும் போட்டு விட்டேன். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள் நண்பர்களே...!

பத்திரிகை போட்டோகிராபர்கள் நடிகைகளை அதுவும் ஹோம்லியான பேட்டியெடுக்கவும், போட்டோ செஷனுக்காகவும் செல்லும்போது எப்படியாவது கொஞ்சம் கிளாமராக படம் எடுத்து விட வேண்டும் என கருதி செல்வார்கள். செய்தி ஆசிரியரிடம் இருந்தும் அப்படியரு இன்ஸ்டக்ஷன்தான் வரும். நடிகையின் வீட்டுக்குப் போனால் அந்த நடிகை ஜீன்ஸ் பேண்ட்டும், மார்டன் ஷர்ட்டையும் போட்டு இம்மியளவும் உடலை வெளியே காட்டாத ஆடைகளை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க தயாராக இருப்பார். போட்டோகிராபரும், நிருபரும் மண்டை காய்ந்து, வேறு ஏதாவது காஸ்ட்யூம் போட்டால் நன்றாக இருக்குமே என்று பேச்சு கொடுப்பார்கள். அதன்பிறகு தாவணி போட்டால் இன்னும் ஹோம்லியாக தெரியுமே... என்று அடுத்த பிட்டை போடுவார்கள். நடிகையும் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே என்று பாவாடை தாவணியில் பளபளவென வந்து நிற்பார்கள். அதன் பின்னர் போட்டோகிராபர் ஏகப்பட்ட குஷியாகி விடுவார். சைடு ஆங்கிளில் படங்களை சுட்டுத் தள்ளுவார். கடைசியில் படம் பத்திரிகையில் வெளியான பின்னர்தான் போட்டோகிராபரின் காது கிழியும் அளவுக்கு டோஸ் கிடைக்கும் நடிகையிடம் இருந்து...!

அழகி மோனிகாவின் அசத்தலான 10 எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ்

சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் அழகி மோனிகாவின் அசத்தலான ஸ்பெஷல் ஸ்டில்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன. படங்களை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசியுங்கள் நண்பர்களே...!

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

Actress Monika Exclusive stills

இதேபோல சினிமா நட்சத்திரங்களில் ஆயிரக்கணக்கான ஸ்டில்ஸ்களை தாங்கி விரைவில் உங்களை சந்திக்கவிருக்கிறது சினிமா நிருபர் டாட் காம். இன்னும் சில தினங்கள் காத்திருங்கள் நண்பர்களே...!

நடிகை சினேகா EXLUSIVE வால்பேப்பர்

சினிமா நிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை SNEHA. EXCLUSUVE WALLPAPER படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு டவுண்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே...!

படுக்கையறை காட்சியில் நடிக்க தயார் : சிந்து துலானி


படத்துக்கு தேவையெனில் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சிந்து துலானி கூறியுள்ளார்.

தமிழில் மன்மதன், மஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிந்து துலானி சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போனார். இப்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் பந்தையம் படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார்.

புதிய தமிழ் படம் குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:&

பந்தயம் படத்தின் கதையை சந்திரசேகர் சார் சொன்னதுமே எனக்கு பிடித்து விட்டது. இதில் பெரிய தாதாவான பிரகாஷ் ராஜ¤ன் தங்கை கேரக்டர் எனக்கு. நான், பிரகாஷ் ராஜிடம் சண்டை போட்டு விட்டு அமெரிக்கா சென்று விடுகிறேன். அங்கு படித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புகிறேன். கல்லூரி படிப்பை சென்னையில் தொடரும்போது நிதின் சத்யாவை சந்திக்கிறேன். காதல் மலர்கிறது. பிரகாஷ் ராஜ் வேடம் அதற்கு பின் எப்படி மாறுகிறது, எங்கள் காதல் என்ன ஆகிறது பந்தயம் படத்தின் கதை.

இவ்வாறு சிந்து துலானி கூறினார்.
அதன் பின்னர் அவரிடர் நிருபர்கள், நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா என்று வழக்கமான கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிந்து துலானி, தெலுங்கு படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் கிளாமராக நடித்தேன். ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் கூட நடித்திருக்கிறேன். கதைக்கு தேவையென்றால் தமிழிலும் அவ்வாறு நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் கவர்ச்சி இமேஜிலேயே காலத்தை கடத்த மாட்டேன், என்றார்.