2008-06-30
விஜய் - த்ரிஷா நட்பு முறிந்ததா? கோலிவுட் KisuKisu
கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் டாக் விஜய் & த்ரிஷா நட்பு முறிந்து விட்டது என்பதைப் பற்றிதான். விஜய்க்கு பொறுத்தமான ஜோடி என்று சொல்லப்படும் த்ரிஷா, சமீபத்தில் கில்லி கூட்டணியில் உருவாகிய குருவி படத்திலும் விஜய்க்கு கதாநாயகி ஆனார். இந்த படத்தில் த்ரிஷா இடத்தில் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க முதலில் முயற்சி நடந்தது. பின்னர் பெரிய இடத்தில் த்ரிஷாவின் வாய்ஸ் எடுபட்டதன் விளைவாக குருவி வாய்ப்பு த்ரிஷாவுக்கே கிடைத்தது என்பது அப்போதைய செய்தி.
விஜய்யின் அடுத்த படத்திலும் த்ரிஷாதான் நாயகி என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் வில்லு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பை நயன்தாரா பெற்று விட்டார். இதனால் அப்செட்டில் இருந்த த்ரிஷாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. சமீபத்தில் விஜய் பிறந்த நாள் விழா மற்றும் ரசிகர் மன்ற கொடி அறிமுக விழாவுக்கு த்ரிஷாவை விஜய் அழைக்கவில்லையாம். கடைசி வரை ஒரு போனாவது பண்ணி அழைப்பார் என்று காத்திருந்த த்ரிஷா ஏமாற்றத்தில் மனம் வெதும்பிப் போய் விட்டாராம்.
அதே நேரத்தில் த்ரிஷாவின் வயிற்றெரிச்சலை கிளப்பும் வகையில் விஜய்யுடனேயே நயன்தாராவும் ஒட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களையெல்லாம் கோர்த்து கோலிவுட்டில் லேட்டஸ்ட் டாக்காக விஜய் & த்ரிஷா நட்பு முறிந்தது என்று பேசிக் கொள்கிறார்கள்.
Labels:
kisu kisu,
Nayanthara,
trisha,
vijay
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் குறித்து உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
//நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் குறித்து உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!//
:-(
Naattkku romba mukkiyama Ithu?????
/
"விஜய் - த்ரிஷா நட்பு முறிந்ததா?
/
ஓ அவங்க ரெண்டு பேரும் ப்ரெண்ஸா???
அவ்வ்வ்வ்
//லேட்டஸ்ட் டாக்காக விஜய் & த்ரிஷா நட்பு முறிந்தது என்று பேசிக் கொள்கிறார்கள்//
இதுல முறியறதுக்கு என்னா இருக்கு?
அண்ணாச்சிக்கு மாமி அலுத்துப் போயி,சேச்சியை ஓட்டுறாரு..
குடுமி இருக்கறவன் அள்ளி முடிஞ்சுக்க வேண்டியதுதான்!
மர்மயோகி படம் எப்போ தொடங்குறாங்க நிருபர்?
தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள்ல நடிச்சா நமக்கே சலிப்பு ஏற்படும். அவருக்கு ஏற்படாதா?
// SUTHA said...
தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள்ல நடிச்சா நமக்கே சலிப்பு ஏற்படும். அவருக்கு ஏற்படாதா?//
அதுவும் சரிதான் சுதா..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!