2008-06-14
தசாவதாரம் பற்றி அசின் XCLUSIVE பேட்டி
தசாவதாரம் படம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. திரையிட்ட முதல் நாளில் அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். படத்தின் கதை சிலருக்கு புரியாத புதிராக இருந்தாலும் பலரும் கமல்ஹாசனின் நடிப்பையும், 10 வித்தியாசமான கெட்டப்களையும் பார்த்து மிரண்டு போவது நிச்சயம். பிரமாண்ட படம், ரூ.75 கோடி பட்ஜெட் படம், நவீன தொழில்நுட்பத்துடன் கிராபிக்ஸ் என பல ஹைலைட்கள் இருந்தாலும் இளம் ரசிகர்களுக்காக இன்னொரு ஹெலைட்டையும் சேர்த்தாக வேண்டும். அதுதான் அசின். இரண்டு வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும், ரசிக்கும்படியாய் நடித்திருக்கிறார்.
முதல் காட்சியில் துடிப்பு மிக்க வைணவ இளைஞர் கமலுக்கு மனைவியாக வருகிறார். பின்னர் படம் முழுக்க விஞ்ஞானி கமலுடன் சுற்றுகிறார். அவ்வப்போது கமல்ஹாசனின் வழக்கமான நெருக்க காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று தியேட்டரை கலகலப்புக்கு உள்ளாக்குவதில் அசினுக்கும் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
தசாவதாரம் படம்தான் அசினுக்கு தமிழில் கடைசி படம் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் தசாவதாரம் படம் வெளியான பிறகு அசின் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக நேற்று காலை முதலே தொலைபேசியில் பேச முயற்சித்தோம். இன்று காலைதான் அம்மணி நம்மிடம் சிக்கினார். அவரது எக்ஸ்குளூசிவ் பேட்டி வருமாறு:&
கேள்வி : தசாவதாரம் படத்தை பார்த்தீர்களா?
பதில் : நான் பார்க்காமல் இருப்பேனா?
கேள்வி : படம் எப்படி இருக்கிறது?
பதில் : அதை நீங்கள்தானே சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை படம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.
கேள்வி : தசாவதாரத்துக்கு பிறகு தமிழில் நடிக்க மாட்டீர்களாமே?
பதில் : யார் சொன்னது? நான் இதுவரை அப்படி யாரிடமும் சொல்லவில்லை. இப்போ கஜினி படத்தின் இந்தி ரீமேக் போயிட்டு இருக்கு. அதைத்தொடர்ந்து இந்தியில் சில படங்களின் வாய்ப்புகள் வந்திருக்கின்றன. நானும் சிலவற்றை ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழில் வேறு படங்களில் இப்போதைக்கு இன்னும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் என்றைக்குமே நான் தமிழை மறக்க மாட்டேன். மற்ற மொழிகளை விட தமிழில்தான் எனக்கு ரசிகர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்.
கேள்வி : தசாவதாரம் சூட்டிங்கில் உங்களுக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் ஏதாவது?
பதில் : தசாவதாரம் படமே ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அதுவும் கமல் சாருடன் நடித்தால் சொல்ல வேண்டுமா என்ன? சூட்டிங்கில் பல காட்சிகளில் கமல் சார் எனக்கு ரொம்பவே உதவினார்.
கேள்வி : இந்தி கஜினி படம் பற்றி...?
பதில் : தமிழில் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் கஜினி. இந்தியிலும் இந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அசின் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நிருபர் வலைப்பபூ குறித்த உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே...!
பட வசூல் விபரங்களை (சிறிது நாள் கழித்து) வெளியிட இயலுமா?
//முரளிகண்ணன் said...
பட வசூல் விபரங்களை (சிறிது நாள் கழித்து) வெளியிட இயலுமா?//
கண்டிப்பாக முரளி கண்ணன்...!
தசாவதாரம் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலுமே நேற்று நல்ல வசூல்தான். முதல் இரண்டு காட்சிகளான ரசிகர்களுக்கான காட்சியிலேயே பெரும் தொகை வசூலாகியிருக்கும் என்பது என் கருத்து. நமக்கு கிடைத்த தகவலின் படி ஏ சென்டர்களில் தசாவதாரம் நல்ல வசூலை வாரி குவிக்கும் என்பதில் ஐயமில்லை. பி மற்றும் சி சென்டர்களில் வசூலில் பாதிப்பு இருக்கலாம் என தோன்றுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சியமைப்புகள் ஏ சென்டர் ரசிகர்களுக்கு மட்டுமே புரிவது போல இருக்கிறது அல்லவா?
//ஆனால் என்றைக்குமே நான் தமிழை மறக்க மாட்டேன். மற்ற மொழிகளை விட தமிழில்தான் எனக்கு ரசிகர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்//
இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரனகளமாக்கறாங்கப்பா :-))))
நிச்சயமாக இது ஒரு எக்ஸ்குளூசிவ் பேட்டி தான். இந்த மாதிரி ஒரு பேட்டி அதைப் பதிவு செய்ய ஒரு பதிவு. அதில் கானா பிரபா தளத்தில் விளம்பரம் வேறு!!!!!
பேட்டியும் நல்லா இருக்கு. அசினும் நல்லா இருக்கு. நிருபர் வலைப்பூவும் நல்லா இருக்கு. போதுமா
மக்கா... அசினு மறுபடியும் தமிழ் படத்துல நடிப்பாரா மாட்டாரானு தெளிவா கேட்டு சொல்லுங்க மக்கா.
//இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரனகளமாக்கறாங்கப்பா :-))))//
ஹி... ஹி... ஹி... ஹி...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!