CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-19

தசாவதாரம் வசூல் சாதனை : SPECIAL ரிப்போர்ட்



உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்த படம் தசாவதாரம். இந்த படம் கடந்த 13ம் தேதி உலகமெங்கும் ரீலிஸ் ஆனது. இந்த படத்தின் கதையை எப்படி ரகசியமாக வைத்திருந்தார்களோ அதேப்போலவே வசூல் விஷயத்தையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்களாம். (வசூல் சாதனையையும் விழாவாக நடத்தப்போகிறார்களோ என்னவோ?)

தசாவதாரம் வெளியான மூன்று நாட்களில் மட்டும் சென்னையில் ரூ.97 லட்சத்து 56 ஆயிரம் வசூலானதாம். இதனை உறுதிபடுத்தியுள்ள தசாவதாரம் பட விநியோக குழுவினர் மற்ற மாவட்ட நிலவரத்தை தெரிவிக்க மறுக்கின்றனர். இருப்பினும் தசாவதாரம் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிக அளவிலேயே இருக்கிறதாம். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவையில் தசாவதாரம் அதிக வசூலை பெற்றுள்ளது.

தசாவதாரம் படம் முந்தைய படங்களில் வசூலை வெளியான மூன்றாவது நாளே முறியடித்து விட்டது என்கிறது இன்னொரு தகவல். சமீபத்திய படங்களில் வசூலை வாரி குவித்துக் கொண்டிருந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வெளியான 9வது வார முடிவில் ரூ.2 . 9 கோடிகளை வசூலித்து சாதனை நிகழ்த்தியிருந்தது. இந்த சாதனையை இளைய தளபதியின் குருவி படம் 6 வாரத்தில் ரூ.2. 91கோடி வசூல் பார்த்து முறியடித்தது. தற்போது தசாவதாரம் படம் மூன்றே நாளில் 1 கோடி வரை வசூலை வாரி குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

Anonymous said...

உழைப்பிற்கேற்ற பலன்

Anonymous said...

Thank you Nirubar.....

Give some more detailed collection report

லேகா said...

kalakitinga....fantastic criticsm...Keep going!!

With Regards,
Lekha
http://yalisai.blogspot.com/

Thambiluvil said...

Exceelent ,,

good service,

god bless you

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!