CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-13

தசாவதாரம் EXCLISIVE : கேள்விகளும், பாராட்டுகளும்



உலக நாயகன் பத்து அவதாரம் எடுத்திருக்கும் படம்.... 75 கோடி ரூபாய் செலவில் உருவான படம்... ஹாலிவுட் ரேஞ்சுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ள படம்... சைவ &வைணவ பிரச்னையை அலசும் படம்...
-இப்படி பல எதிர்பார்ப்புகளுடன்தான் நானும், பிரபல வார பத்திகை ஒன்றின் துணை ஆசிரியர் திரு.நெல்லைராஜன் அவர்களும் தசாவதாரம் படத்தை பார்க்க போனோம். படத்தின் விமர்சனங்களை ஏற்கனவே பல வலைப்பதிவர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இதில் நானும் என் பங்குக்கு தசாவதாரத்தின் விமர்சனத்தை எழுதித் தள்ள விரும்பவில்லை. வாசகர்களுக்கு புதிதாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதானால் தசாவதாரம் படக்குழுவினருக்கு 6 கேள்விகளை மட்டும் முன்வைக்கிறேன். இதையே விமர்சனமாக படித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே...!

1) தசாவதாரம் படத்தில் வரும் 10 கமல்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பது ஏன்? ஒருவேளை புதுமைக்காக என்று இப்படி எடுத்தீர்களா?

2) ஜார்ஜ் புஷ் கேரக்டர் ஒரு பொம்மை கேரக்டர் போலவே தெரிகிறது. அந்த கேரக்டர் மேக்கப் மட்டும் ஏன் இப்படி ஆனது?

3) ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுத்தீர்கள்.. சரி..! அதற்காக ஒருசில காட்சிகளில் பேசும் வசனங்களே புரியாத வகையில் எடுத்திருப்பது ஏன்?

4) நம்பியின் வாக்குவாத காட்சிகள் படத்தில் அவசியம் தேவைதானா? நம்பிக்கும் மற்ற கேரக்டர்களுக்கும் என்ன சம்பந்தம்?

5) அக்ரஹாரத்து அழகுப்பெண்ணாக வரும் அசினை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமே...?

6) படத்தின் டைரக்டர் படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார்தானா?

- இப்படி சந்தேக கேள்விகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்...! நான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் மீதி கேள்விகளை பின்னர் எழுப்புகிறேன்.

அதேநேரத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவழித்து எடுக்கப்பட்டுள்ள தசாவதாரம் படத்தில் பாராட்டுவதற்கும் எக்கச்சக்கம் இருக்கிறது.

உலக நாயகன் என்ற பெயரின் அர்த்தத்தை உலகுக்கே புரிய வைத்து விட்டார் நம்ம உலக நாயகன். காட்சிகளை நகர்த்தியிருக்கும் விதம், பிரமாண்டம், கிராபிக்ஸ் உத்தி... இவை மூன்றும் சேர்ந்ததால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

10 அவதாரங்கள் என்னென்ன?

தசாவதாரம் படத்தை பார்க்காத ரசிகர்கள் கேட்கும் பொதுவான ஒரு கேள்வி? கமல்ஹாசனின் 10 அவதாரங்கள் என்ªன்ன? என்பதுதான் அந்த கேள்வி. அவர்களுக்காக இந்த தகவல்...!

1) வைணவ இளைஞர்
2) ஜார்ஜ் புஷ்
3) விஞ்ஞானி
4) கராத்தே மாஸ்டர்
5) பஞ்சாபி பாடகர்
6) தலித் இளைஞர்
7) அமெரிக்க இளைஞர்
8) இஸ்லாமிய இளைஞர்
9) வயதான பாட்டி
10) உளவுத்துறை அதிகாரி

குறிப்பு : உலகமே எதிர்பார்க்கும் தசாவதாரம் படத்தின் விமர்சனத்தை பலரும் அவரவர் கண்ணோட்டத்தில் எழுதித் தள்ளி வருகிறார்கள். நானும் என் பங்குக்கு எனக்கு தோன்றியதை எழுதியுள்ளேன். இதனை விமர்சனம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி என்று வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!

12 comments:

Anonymous said...

//காட்சிகளை நகர்த்தியிருக்கும் விதம், பிரமாண்டம், கிராபிக்ஸ் உத்தி... இவை மூன்றும் சேர்ந்ததால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.//

படத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறோம்.

கிரி said...

விமர்சனமாக இல்லாமால் வித்யாசமாக கொடுத்த சினிமா நிருபருக்கு வாழ்த்துக்கள்

பாண்டி-பரணி said...

// தசாவதாரம் படத்தில் வரும் 10 கமல்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பது ஏன்? ஒருவேளை புதுமைக்காக என்று இப்படி எடுத்தீர்களா //

இதுவும் குழப்பமில்லாத திரைக்கைக்கு வலு சேர்க்கும்..

வலை விமர்சணம் எல்லாம் திருப்தியாக வந்துள்ளதால் படம் பார்க்கும் ஆவல் மிக உள்ளது..

மங்களூர் சிவா said...

/
ம்

நல்லா இருக்கு முயற்சி.
/

படம் பாத்துட்டு வந்து பதிவ திரும்ப படிக்கிறேன்.

சி தயாளன் said...

வித்தியாசமாக அதே நேரம் கலக்கலாகவும் இருக்கு..! கட்டாயம் எல்லாரும் பார்க்கோணும்.. ..

Athisha said...

நல்ல விமர்சனம் , நல்ல முயற்சி

இன்னும் படம் பாக்கல பார்த்துட்டு மறுபடியும் வரேன்

rapp said...

நெம்ப நல்லா இருக்குங்க இந்த பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.

சின்னப் பையன் said...

//நல்ல விமர்சனம் , நல்ல முயற்சி

இன்னும் படம் பாக்கல பார்த்துட்டு மறுபடியும் வரேன்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சி தயாளன் said...

10 கமல்களையும் விரிவா போட்டுள்ளீர்கள்..! நல்ல படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்..!
பூவராகவன் கதாபாத்திரம் பிரதான கதையுடனும் சாராமல் போனது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அவரின் போராட்டமும், மண்பற்றும் அதை மறைக்க செய்து விடுகின்றது..

கானா பிரபா said...

நன்றாக இருக்கு நன்றி நண்பரே

Anonymous said...

Dear All,

I have seen this movie
1st day 1st show - place - komarapalayam in salem district ..the response was very good from the audience. infact till the end whistle sound not allowed us listen the movie ...

so definetly this movie will be hit in B &C centers also..

Moorthy - Bangalore

Anonymous said...

Hi,
Dasavatharam is really a nice movie. All 10 characters are totally different. It definitely can compete Hollywood films. No doubt this movie will be a sensational hit.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!