2008-06-27
குசேலனில் நடிக்க மறுத்த விஜய்-அஜித் : அதிர்ச்சி தகவல்
குசேலன் படத்தில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் ஆகியயோர் நடிக்க மறுத்தனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் படம் குசேலன். சூப்பர் ஸ்டார் நடிகராகவே ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கிறார். 75 ஆண்டுகால சினிமா வரலாற்றை பறைசாற்றும் வகையிலும், நட்பை மேன்மைப்படுத்தும் வகையிலும் உருவாகி வரும் இந்த படத்தில் சினிமா சினிமா சினிமாதான்... என்.டி.யாரு வந்ததும் இந்த சினிமாதான் என தொடங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. படத்தின் ஹைலைட் பாடலான இந்த பாடலில் இளம் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்டவர்களும் இடம்பெறுவார்கள் என்று குசேலன் படத்தின் இயக்குனர் பி.வாசு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் அந்த பாடலின் சூட்டிங் சென்னை சாந்தி தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட டைரக்டர் வாசு, நிருபர்களிடம் பேசுகையில், குசேலனில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பதாக இருந்தது. இப்போது அவர்கள் நடிக்கவில்லை. ரஜினியின் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரசிகர்களை வைத்தே படமாக்கி விட்டோம் என்று கூறினார்.
சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கி வரும் நிலையில், இப்படி திடீர் அறவிப்பு வெளியிடுவதற்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. குசேலன் பட இயக்குனர் பி.வாசு, தங்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அறிவித்துள்ளார் என்று விஜயமான நடிகர் குறைபட்டுக் கொண்டாராம். அதோடு நில்லாமல் அஜி நடிகருக்கும், விக்ர நடிகருக்கும் போன் போட்டு பேசி, நாம நம்ம படங்கள்ல பிஸியா இருக்கும்போது, நம்மக்கிட்ட கேட்காம அறிவிச்சிருக்காங்க. அது எப்படி நடிக்க முடியும்? என்று கேட்டிருக்கிறார். இந்த விஷயம் வாசுவின் காதுகளுக்கு எட்டியது. அதனை வாசு, ரஜினிகாந்திடம் தெரிவிக்க... அப்போ... அவங்க வர்ற மாதிரி காட்சி வேண்டாம். ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். தமிழ்நாடு முழுதும் இருந்து ரசிகர்களை வரச் சொல்கிறேன். அவர்களை படத்தில் பங்குபெற வைப்போம். ரசிகர்களுக்கு இப்படியரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை, என்று கூறியுள்ளார். இதையடுத்துதான் ரசிகர்களை வைத்து குசேலன் சூட்டிங் நடத்தப்பட்டதாம்.
இந்த தகவல் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரது காதுகளுக்கும் எட்ட... திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், இவங்கல்லாம்... அவங்க படத்துல ரஜினி படத்தையும், ரஜினி பேரையும் சொல்லி முன்னேறுனவங்க. இப்போ ரஜினி படத்துலயே நடிக்க மாட்டேன் என்கிறார்களே..! என்று வேதனைப்பட்டுக் கொண்டார்.
என்ன கொடுமை நண்பர்களே இது?
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
ENN KODUMAI SIR ITHU???????????
//குசேலனில் நடிக்க மறுத்த விஜய்-அஜித் : அதிர்ச்சி தகவல்//
:-X
என்ன கொடுமை சார் இது?
இப்ப ஒலகத்திலயே மொதல் மொறையா அனைத்து முண்ணனி நடிகர்களும் 'ஓம் ஷாந்தி ஓம்' பாட்டு மாதிரி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு போயே போச்சே!
//குசேலன் பட இயக்குனர் பி.வாசு, தங்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அறிவித்துள்ளார் என்று விஜயமான நடிகர் குறைபட்டுக் கொண்டாராம். //
எனகென்னவோ கேட்காம அறிவித்தது தவறு தான்..என்ன தான் தலைவர் பெரிய ஆளாக இருந்தாலும் வாசு இப்படி இப்படி செய்ய கூடாது. இதில் ரஜினியின் தலையீடு இருந்து இருக்காது என்று நம்புகிறேன்.
ஒருத்தர் படத்துல நடிப்பதும் நடிக்காததும் அவர்களது விருப்பம்..யாரும் யாரையும் கட்டாய படுத்த முடியாது ..கூடாது
இவர்கள் நடிக்காததும் நல்லது தான்..இல்லேன்னா படமே நான் வந்த ஒரு பாட்டால தான் ஒடியதுனு இவங்க அலும்பு தாங்காது.
//சினிமா சினிமா சினிமாதான்... என்.டி.யாரு வந்ததும் இந்த சினிமாதான் என தொடங்கும்//
ஏற்கனவே ஆண்பாவம் படத்தில் "இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்...என் டி ஆர் வந்ததும் எம்ஜிஆர் வந்ததும் இந்த சினிமாதான் " என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது.
//சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கி வரும் நிலையில், //
நடிகைகள் இயக்குனர்கள் ஒருவேளை ஏங்குவார்களோ ? கண்டிப்பாக ஐஸ் ஏங்கியது போல் தெரியவில்லை.
:)
ஹீரோவாக நடிப்பவர்கள் யாரும் அப்படி ஏங்குவது போல் தெரியவில்லை...சத்தியராஜ் உட்பட பல நடிகர்கள் 'நோ..' சொன்னதும் ஷங்கர் வேறு வழியில்லாமல் சுமனை சிவாஜியில் வில்லனாக நடிக்க வைத்தார்.
செய்தியை செய்தியாக போடுங்கள்...திரை ரசிகர்கள் என பலதரப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் படிக்கும் பதிவில் ரஜினி ரசிகனாக(?)ஓவர் பில்டப்பில் எழுதி இருப்பது பலருக்கு உவப்பாக இருக்கும்.
என்ன கொடுமை நண்பர்களே இது?
//இந்த தகவலால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
ஆனாலும் நிருபரே, இது கொஞ்சம் ஓவர். :-)
//கோவி.கண்ணன் said...
செய்தியை செய்தியாக போடுங்கள்...திரை ரசிகர்கள் என பலதரப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் படிக்கும் பதிவில் ரஜினி ரசிகனாக(?)ஓவர் பில்டப்பில் எழுதி இருப்பது பலருக்கு உவப்பாக இருக்கும்.//
இந்த செய்தியில் என்ன ஓவர் பில்டப் இருக்கிறது கோவிகண்ணன். ரஜினியுடன் நடிக்க எத்தனையோ நடிகர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. தலைவருடன் நடிக்க ஆசை இல்லை என்று ஐஸ் உங்களிடம் வந்து சொன்னாரா? செய்தியை படித்தால் நியாயமான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா?
கிரி சொல்லியிருக்கற கருத்துக்கு ரீப்பிட்டேய்...
//தலைவருடன் நடிக்க ஆசை இல்லை என்று ஐஸ் உங்களிடம் வந்து சொன்னாரா? //
படையப்பா நீலாம்பரி ரோல் முதலாக ஐஸ்சை முயற்சி செய்து பார்த்ததாக உங்க தலைவரே சிவாஜி வெற்றிவிழாவில் அறிவித்தார். ரோபோவில் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள். படப்பிடிப்பு தொடங்கும் போதுதான் நடக்குமா என்பதே தெரியும்.
//செய்தியை செய்தியாக போடுங்கள்...திரை ரசிகர்கள் என பலதரப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் படிக்கும் பதிவில் ரஜினி ரசிகனாக(?)ஓவர் பில்டப்பில் எழுதி இருப்பது பலருக்கு உவப்பாக இருக்கும்//
கோவி கண்ணன், நிருபர் அந்த எண்ணத்தில் போட்டு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம் திரை செய்திகள் தரும் அனைவரும் இதை போலவே தருவார்கள். நீங்கள் கமல் பற்றிய நிருபரின் செய்திகளை பார்த்தீர்கள் என்றால் தெரியும். கமலுக்கும் அவ்வாறே கூறி இருப்பார்.
திரை செய்திகளை தருபவர்கள் அனைவருக்கும் சாதகமாக எழுதினால் மட்டுமே அனைவரும் வந்து படிப்பார்கள் என்பது தெரியும், எனவே அதை நிருபரும் அறிந்தே வைத்து இருப்பார்.
எனவே ஒரு தலைபட்சமாக கண்டிப்பாக எழுதி இருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து.
இதுல அதிர்ச்சி அடையறதுக்கு என்ன இருக்கு? எதெதெதுக்கு அதிர்ச்சி அடையறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா? நல்ல வேளை! தமிழகம் ஸ்தம்பித்து விட்டதுன்னு எழுதாம விட்டீங்களே. ஆமாம்! உங்களுடைய உலகம் சாதாரண மக்களின் உலகத்தை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறதா?
// அவங்க படத்துல ரஜினி படத்தையும், ரஜினி பேரையும் சொல்லி முன்னேறுனவங்க. இப்போ ரஜினி படத்துலயே நடிக்க மாட்டேன் என்கிறார்களே..! என்று வேதனைப்பட்டுக் கொண்டார். //
What are you speaking dude ? Do you think these actors are making a living out of rajini's name... what kind of logic is this ? Then why did Rajini used MGR, Sivaji names in baba and his latest sivaji... does that mean he makes a living out of their names ?
Blame Vasu for his unprofessional approach rather than blaming the respective heroes. Many of them have acted in several loves stories and have given more blockbusters in their early days. Don't rate their hardwork cheaply just for your bias towards rajini
enna kodumai saar? ithila Rajini is not even the main hero then how's it a Rajini film? Pasupathi padathila Rajini nadikiraar, matRavanga maRuthitaanga
if vijai says iam a rajini fan,
don't belive that guys
வாசு செய்ததில் கொஞ்சமும் நியாயமில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் எதுவுமே சொல்லாமல், இவராகவே இந்தப் படத்தில் அவர்கள் நடிப்பார்கள் என்று அறிவிப்பது தலைகனம் பிடித்த செயல்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!