CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-23

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!


தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள் வாசகர்களே...! வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காத்தான் இப்படி தலைப்பு.

சரி நேராக விஷயத்துக்கு வருகிறேன். வலைப்பதிவர் முத்துலட்சுமி கயல்விழி... நமக்கு ஒரு பின்னூட்டமிட்டுள்ளார். அதில், நிருபர் வலைப்பூ திறப்பதற்கு 5 நிமிடங்கள் ஆகிறதுஎன்று கூறியுள்ளார். கயல்விழி முத்துலட்சுமியின் பின்னூட்டம் வருமாறு:-

//கயல்விழி முத்துலெட்சுமி said...

கிரி வைத்திருந்த அதே வெப் கவுண்ட்டர் தான் நீங்களும் வச்சிருக்கீங்க போல.. உங்க பதிவ திறந்ததுக்கு 5 நிமிசம் என் கணினி அப்படியே நின்னு போச்சு.. windows installer வந்து எதோ இன்ஸ்டால் செய்யறேன்னுது.. அப்பரம் பாரத் ஸ்டூடண்ட் .காம் ன்னு விளம்பரம் வேற பாப் அப் ஆகுது.. இத சொன்னதுக்கப்பறம் கிரி அவர் பதிவில் வெப் கவுண்ட்டர் தான் பிரச்சனைன்னு எடுத்துட்டார்.. சரி பார்க்கவும்..//

இதில் எனக்கு தெரிய வேண்டிய விஷயம் என்னவென்றால்... உங்களில் யாருக்கெல்லாம் கயல்விழி முத்துலட்சுமி கூறும் பிரச்னை வருகிறது என்பதுதான். உங்களுக்கும் இதுபோன்ற பிரச்னை இருந்தால் தெரியப்படுத்துங்கள் வாசகர்களே...! வலைப்பூவில் இந்த நேரத்தில் எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக வைத்துள்ள இந்த வெப்கவுண்டரால் எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. ஒரு நிமிடத்துக்குள் வலைப்பூ திறந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்னை என்றுசொல்லப்படும் வெப் கவுண்டரை தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது நீக்கி விடலாமா என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!

11 comments:

Samuthra Senthil said...

ஆன்லைனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டும் இந்த வெப்கவுண்டர் நிருபர் வலைப்பூவை அலங்கரிப்பதாக நான் கருதுகிறேன். ஒரே நேரத்தில் 10, 15, 20, 30 என வாசகர்களின் எண்ணிக்கை பளிச்சென தெரிவது கவர்ந்து இழுப்பதுடன், இன்னும் அதிக செய்திகளை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் எனக்கு தருவதாக நினைக்கிறேன்.


நீங்க என்ன நினைக்கிறீர்கள்... பின்னூட்டத்தில் சொல்லுங்கள் வாசகர்களே...!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

எனக்கும் கமெண்ட்ஸ் க்ளிக் பண்ணியவுடன் பாரத் ஸ்டுடண்ட் சைட் ஓபன் ஆகிறது .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Anonymous said...

எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை நிருபரே... அப்புறம் உங்க இஷ்டம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இன்று ஒரு ஆபாச சைட் ஓபன் ஆகியது !
comment ஐ க்ளிக் பண்ணியவுடன் !!!

கிரி said...

யாரும் குழம்ப வேண்டாம், காரணம் இது தான் (என்பது என் கருத்து)

நீங்கள் வைத்து இருக்கும் ஆன்லைன் எண்ணிக்கை நிரலியில், compteur என்ற நிறுவனத்தின் (இது தான் இந்த நிரலியின் உரிமையாளர்) விளம்பரம் உள்ளது, எனவே அது உங்கள் பதிவை திறக்கும் போது தன் விளம்பரத்தை வெளியிடுகிறது. அது ஆபாச விளம்பரமாகவும் இருக்கலாம் சாதாரண விளம்பரமாகவும் இருக்கலாம்.

அப்புறம் ஏன் ஒரு சிலருக்கு அவ்வாறு வருவதில்லை?

அதற்க்கு காரணம் அவர்கள் கணிப்பொறியில் உள்ள popup blocker அல்லது வைரஸ் தடுப்பான் அல்லது firewall இதை தடுத்து இருக்கலாம்.

இதற்க்கு என்ன தான் வழி?

ஒரே வழி அந்த ஆன்லைன் எண்ணிக்கையை காட்டும் நிரலியை அது அழகாக (அழகு என்றாலே ஆபத்து தான் போல இருக்கு) இருந்தாலும் வேறு வழி இல்லாமல் நீக்கி விடுவது.

இதை நீக்காமல் இருந்தால் என்ன?

இவர்களை போல வர பயப்படுவார்கள் (நியாயமான பயம் தான்) உங்கள் பதிவுக்கு வர மாட்டார்கள். யாரும் வம்பை தேடி போய் வாங்க மாட்டார்கள்.

வலைப்பதிவு மெதுவாக திறக்க வேறு காரணம் எதுவும் உள்ளதா?

வலைப்பதிவு மெதுவாக திறப்பதற்கு உங்கள் கருவி பாட்டையும் காரணமாக இருக்கலாம், உங்கள் கருவி பட்டையை என் பதிவில் இருப்பது போல் கீழ் பகுதியில் அமைத்தீர்கள் என்றால் வேகம் கூடும்.

பின்குறிப்பு.

நிருபர் வலைப்பூவை 30 பேர் ஒரே சமயத்தில் பார்த்த போது எடுத்த படம் என்று நமீதா படம் போட்டு இருக்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கு நமீதாவே தானை தலைவி என்று நிரூபித்து விட்டார் :-))))))))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

நான் pop up blocker ஆன் செய்துள்ளதால் எனக்கு எதும் வரவில்லை ஆனால் pop up block செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

மங்களூர் சிவா

பெத்தராயுடு said...

for me, it opens the bharathstudent.com in another window every time.

Ganeshkumar said...

நான் பாப் அப் போட்டிருக்கிறேன். அதனால ப்ராபளம் இல்லை. எல்லோரும் பாப் அப் போட்டுக்கிட்டா நல்லது.

Samuthra Senthil said...

விரிவான விளக்கம் கொடுத்த நண்பர் கிரிக்கு நன்றி...! தாங்கள் சொன்னதுபோல அந்த நிரலியை நீக்கிவிடுகிறேன். இந்த பிரச்னையை எனது கவனத்துக்கு கொண்டு வந்த கயல்விழி முத்துலட்சுமி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

நன்றி நிருபரே

Anonymous said...

நான் pop-up blocker போட்டிருக்கிறேன். அதனால பிரச்சினை இல்லை.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!