CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-11

ரஜினி - கமல் மீண்டும் இணைகிறார்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருக்கிறார்‌கள் என்ற செய்தி கோலிவுட்டையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா சார்பில் டுவென்டி:20 என்ற பெயரில் ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது. அம்மாவின் கனவு திட்டமான இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம் உள்ளிட்ட 60 கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் நடிப்பதற்காக தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம் ஆகியோருக்கு அம்மா சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியி்ல ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பார்கள் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

4 comments:

கிரி said...

நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் :-)

முரளிகண்ணன் said...

மற்ற சினிமா தொடர்பான தளங்களை விட உங்கள் வலைப்பதிவு வேகமாகவும் சுவையாகவும் இருக்கிறது. தொடருங்கள்

Samuthra Senthil said...

கிரி மற்றும் முரளிகண்ணனுக்கு நன்றி.

//முரளிகண்ணன் said...
மற்ற சினிமா தொடர்பான தளங்களை விட உங்கள் வலைப்பதிவு வேகமாகவும் சுவையாகவும் இருக்கிறது. தொடருங்கள்//

விரைவில் எமது குழுவினர் தொடங்கும் சினிமா இணையதளத்தில் இதைவிட பல மடங்கு அதிக செய்திகள் மற்றும் ஸ்டில்கள் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தளம் வடிவமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். தங்களது தொடர் வருகைக்கு நன்றி.

கிரி said...

//விரைவில் எமது குழுவினர் தொடங்கும் சினிமா இணையதளத்தில் இதைவிட பல மடங்கு அதிக செய்திகள் மற்றும் ஸ்டில்கள் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தளம் வடிவமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். தங்களது தொடர் வருகைக்கு நன்றி.//

சாதா தோசையையே இந்த பிடி பிடிக்கிறோம்.. ஸ்பெஷல் தோசை கிடைத்தால் விடுவோமா? :-))

உங்கள் புதிய வரவு பல வெற்றிகளையும் வாசகர்களையும் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!