2008-06-24
எஸ்.ஜே.சூர்யாவிடம் சிக்கிய பாலிவுட் நடிகை
தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாநாயகிகளிடம் இரட்டை அர்த்த வசனம் பேசி, வெலவெலக்க வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் இந்த முறை சிக்கியிருப்பவர் பாலிவுட் நடிகை ஷயாலி.
எஸ்.ஜே.சூர்யா தற்போது நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க தமிழில் பல நடிகைகளை கேட்டனர். ஆனால் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பயந்து ஓட்டம் பிடித்ததுதான் மிச்சம். இருப்பினும் மனம் தளராத நியூட்டன் குழுவினர் மும்பையில் இருந்து பாலிவுட் பப்பாளிப்பழத்தையே நாயகியாக கொண்டு வந்து விட்டனர். இந்தியில் வெளியான தி டிரெயின், ஹல்லா போல் போன்ற படங்களில் நடித்துள்ள ஷயாலி, நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் டி.வி. காம்பியராக நடித்துள்ளாராம்.
சூர்யாவின் இந்த படத்தில் `அந்த` மாதிரியான வசனங்கள் இல்லை என்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன். (சத்தமா சொல்லாதீங்க முத்துசெல்வன்... அப்புறம் எஸ்.ஜே.எஸ். (S.J.SURYA) ரசிகர்கள் கோவிச்சுக்கப் போறாங்க...!)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
\\சூர்யாவின் இந்த படத்தில் `அந்த` மாதிரியான வசனங்கள் இல்லை என்கிறார் \\
அப்ப படம் பார்க்க போகலாம்
//முரளிகண்ணன் said...
அப்ப படம் பார்க்க போகலாம்//
கண்டிப்பா... தியேட்டரில் போய் பாருங்க முரளிகண்ணன்.
ஐயோ... ஐயோ... பாலிவுட் பாப்பா பாவம்.
சத்தமா சொல்லாதீங்க முத்துசெல்வன்... அப்புறம் எஸ்.ஜே.எஸ். (S.J.SURYA) ரசிகர்கள் கோவிச்சுக்கப் போறாங்க...!
:)))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!