2008-06-21
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு குசேலன் என்ற பெயரில் மலையாள ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலக நட்சத்திரங்களின் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
குசேலன் படத்தைப் பற்றி ஏற்கனவே சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தோம். அதனை ஏராளமான ரசிகர்கள் படித்து ரசித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு நற்செய்தி ரஜினி ரசிகர்களை தேடி வந்துள்ளது. ஆம் குசேலன் படத்தின் ஆடியோ வருகிற 30ம் தேதி ரீலிஸ் ஆகவிருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் படத்தின் ரீலிஸ் தேதியும் தெரியவந்துள்ளது. குசேலன் படத்தை வருகிற ஜுலை மாதம் 25ம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். தெலுங்கில் தயாராகியுள்ள கதாநாயடு படமும் அதே நாளில்தான் திரையிடப்படுகிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் பி.வாசுவிடம் கேட்டபோது, குசேலனை ஜுலை 25ம் தேதி வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினிகாந்ததை பொறுத்தவரை அவரது பணிகளை முடிந்து விட்டார். எப்போது வேண்டுமானாலும் படத்தை ரீலிஸ் செய்யுங்கள் என்று கூறி விட்டார். ஆடியோ ரீலிஸ் விழாவின்போது குசேலன் ரீலிஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம், என்றார்.
இதற்கிடையில், மேக்கிங் ஆஃப் குசேலன் என்ற பெயரில் குசேலன் உருவான கதையையும் சிடியாக எடுத்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பது கொசுறு தகவல்.
குசேலன் பற்றிய சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே...!
//"சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி"//
Nalla seithi than.
SUPPARAPPU...
//ரஜினிகாந்ததை பொறுத்தவரை அவரது பணிகளை முடிந்து விட்டார். //
தலைவர் எப்போதுமே செம வேகம் :-)
குசேலன் வெற்றி பெற வாழ்த்துகள்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!