CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-18

தாடி ஏன்? கமல்ஹாசன் பதில்


தாடி வளர்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். புதுமுக நடிகர் - நடிகை நடிக்கும் கொடைக்கானல் படத்தில் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் தனது ஆசையை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

சினிமா படத்துக்கு, பட்ஜெட்டுக்கும் பலர் முடிச்சு போட்டு பார்க்கிறார்கள். பட்ஜெட்டை வைத்து பெரிய படம், சின்ன படம் என்ற கருத்துதான் இங்கு நிலவுகிறது. படம் ரீலாஸாகும் வரை அது சின்ன படமா, பெரிய படமா என்பது யாருக்கும் தெரியாது. பெரிய செலவுகள் செய்து படம் எடுத்தாலும் மக்கள் கொஞ்சம் முகம் சுழித்தாலே அது சாதாரண, சின்ன படமாகிவிடும். எனக்கு முன்பு பேசிய பாரதிராஜா, கமலை வியந்து பார்க்கிறேன் என்றார். டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த என்னை கோவணம் கட்டி நடிக்க வைத்தவர் அவர். அவரை நானும் வியந்து பார்க்கிறேன்.

ஒரு காலத்தில் இவனுங்களெல்லாம் என்ன படம் எடுக்குறாய்ங்க என்று ஒருமையில் அவன், இவன் என திட்டியவர்களெல்லாம் படம் வெளியாகி, வெற்றி பெற்ற பிறகு மரியாதை கொடுக்கத் தொடங்கினார்கள். அதுபோலத்தான் தசாவதாரம் படத்திற்கு கிடைத்துள்ள வெற்றியும், வரவேற்பும் என்னை சந்தோஷப்பட வைக்கிறது. ஆஸ்கார் விருது பற்றியெல்லாம் இங்கு பேசினார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. தமிழகத்திற்கே சிறப்புமிக்க விருந்தோம்பல் முறையை வெள்ளைக்காரணுக்கும் நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் இங்கு வந்து நாம் தரும் விருதை வாங்கி மகிழும் நாட்கள் வரும். அதை எனது வாழ்நாட்களுக்குள் பார்த்துவிட்டு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுதான் எனது ஆசை.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இந்த விழாவில் கொடைக்கானல் படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட, டைரக்டர் பாரதி ராஜா பெற்றுக் கொண்டார். இப்படத்தை சொர்ண லஷ்மி மூவிஸ் தயாரிக்க, டைரக்டர் கே.போஸ் இயக்குகிறார்.

விழா முடிந்ததும் கமல்ஹாசனை சூழ்ந்த நிருபர்கள், ஏன் இன்னமும் ஷேவ் செய்யாமல் தாடியுடன் இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்றார். அடுத்த படத்துக்காக வளர்க்கும் தாடியா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அப்படியும் வைத்துக் கொள்ளலாம், என்றார்.

5 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

Anonymous said...

இது பற்றிய ஒரு பதிவு

தாடி ஏன்?

-Theevu-

Anonymous said...

Damu pa kmu to?.. Nano ni klase blog man?

Anonymous said...

ரொம் ப நன்றீ

பினாத்தல் சுரேஷ் said...

http://penathal.blogspot.com/2006/10/blog-post_07.html

இங்கே பாருங்கள், கமல் பேச்சை ரெண்டு வருடம் முன்பே பதிவு செய்தாகிவிட்டது :-))

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!