2008-06-17
ரஜினியின் நீண்டநாள் ஆசை : ரகுராம்
தசாவதாரம் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்த கமல்ஹாசனின் உதவியாளராக நடித்தவர் ரகுராம். நடன இயக்குனரான இவர் சில படங்களையும் இயக்கியிருக்கிறார். இவர் நடிகை காயத்ரி ரகுராமின் தந்தை. இப்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் ரகுராமிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ள முன்னணி நடிகர்கள் நல்ல தோழர்கள். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் அப்பாராவாக நடித்த இவரது கேரக்டர் பேசப்பட்டு வருகிறது.
இதுபற்றி நிருபர்களிடம் பேசிய ரகுராம், கமலுடன் 1959ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். இப்போது கமல் உலக சாதனை படைத்திருக்கும் படத்தில் நடித்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும். ஏற்கனவே நான் வங்காள மொழில் நான் இயக்கிய பாக்ய தேவதா என்ற படத்தை இயக்கியுள்ளேன். இந்த படத்தில் ரஜினி, புரட்சி கவிஞர் வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை. அது கூடிய சீக்கிரமே நிறைவேறும் என நம்புகிறேன், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நிருபர் வலைப்பூவில் வெளியாகும் செய்திகள் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!