CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-14

பழனியில் தசாவதாரம் பார்த்தார் விஜய்


இளையதளபதி விஜய், உலக நாயகனின் தசாவதாரம் படத்தை பழனியில் ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து பார்த்துள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நடிகர் விஜய் தற்போது பிரபு தேவா இயக்கத்தில் உருவாகி வரும் வில்லு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தசாவதாரம் படத்தை பார்க்க வில்லு படக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் புக் செய்த விஜய், பிரபு தேவா மற்றும் வில்லு பட குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்தபடி தசாவதாரம் படத்தை ரசித்துள்ளனர். இதனை உறுதிசெய்துள்ள விஜய், தசாவதாரம் படத்தை எதிர்பார்த்து வந்த கோடானுகோடி ரசிகர்களின் நானும் ஒருவன். கமல் சாரின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட நான், தசாவதாரம் படத்தின் பிரமாண்டத்தையும், கமல் சாரின் நடிப்பையும் பார்த்து வியந்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ஏற்கனவே தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே கமல்ஹாசனை பாராட்டியதுடன், படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

Anonymous said...

ILAYA THALAPATHI VIJAY VAALGA... NIRUBAR VALAI POO NALLA IRUKKUTHUNKA.

Anonymous said...

idhu ellam ok.but ajit padatha theatre poi parpara namma vijay?????

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!