2008-06-16
பாட்ஷா டைரக்டர் படத்தில் பரத்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட், சூப்பர் ஹிட், சூப்பர் டூப்பர் ஹிட் படம் பாட்ஷா. இந்த படத்தை இயக்கியவர் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படம் உள்பட ஏராளமான படங்களை இவர் இயக்கியுள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா அடுத்து இயக்கவுள்ள படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடிக்கவுள்ளார். படத்துக்கு இன்னமும் பெயர் சூட்டப்படாத நிலையில் ஹீரோயின் வேட்டை நடந்து வருகிறது. இந்த படமும் பாட்ஷா, அண்ணாமலை போல மெகா ஹிட் ஆகும் என்று சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா, தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்த வருகிறார்.
நடிகர் பரத் தற்போது டைரக்டர் ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு சுரேஜ் கிருஷ்ணாவின் படத்தில் நடிக்கவுள்ளார்.
பழனி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பரத்தின் சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்து விட்டது என்பது கொசுறு தகவல்.
Labels:
barath
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!
நிருபரே பழனி ஹிட்டா???
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!