2008-06-23
மனைவியுடன் கருத்து வேறுபாடு : ரஜினி பரபரப்பு பேச்சு
தனது மனைவி லதாவுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி - நந்தினி திருமணம் சென்னையில் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக வாழ்க்கை தத்துவம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-
வைரமுத்து எனக்கு நீண்ட கால நண்பர். அவரு நிறைய நண்பர்கள சம்பாதிச்சிருக்காருன்னு இப்ப... இந்த கல்யாணத்தின் மூலமா தெரியுது. பொதுவா கவிஞர்னா தனியா இருக்கிறவங்க. தனிமைய ரசி்ச்சி கவிதை எழுதுறவங்கன்னு சொல்லுவாங்க. ஆனா... இவருக்கு... வைரமுத்துக்கு இவ்வளவு நண்பர்கள சம்பாதிக்க எப்டி நேரம் கெடச்சிதுன்னு தெரியல.
கல்யாணமாகுற புதுமண தம்பதிங்கள வாழ்த்துறதோட சில விஷயங்ள இங்க சொல்றேன். என்னோட அனுபவத்துல நான் இத சொல்றேன். கணவன்- மனைடிக்கும் கருத்து வேறுபாடுங்கிறதே இல்லாம இருக்காது. அது இந்த ரஜினிகாந்திற்கும்- லதாவுக்கும் இடையே கூட வந்திருக்கு. எங்களுக்குள்ள கருத்து வேறுபாவே வரலன்னு யாராச்சும் சொன்னாங்கன்னா... அவங்க பொய் சொல்றாங்கன்னு அர்த்தம்.
நிம்மதிய விட பெரிய சொத்து எதுவுமே இல்ல. பணம், புகழ்னு நெறைய சம்பாதிச்சாலும் நிம்மதி இருந்தாத்தான் அந்த பணம் புகழ அனுபவிக்க முடியும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தா நல்ல வாழ்க்கை வாழலாம் என்று கூறி மணக்களை வாழ்க பல்லாண்டுன்னு வாழ்த்துறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
ரஜினியின் பேச்சை படிக்கும்போதே... பேச்சை கேட்ட எபெக்ட் இருக்கு நிருபர். நல்லா எழுதியிருக்கீங்க. என்ன தலைப்பு மட்டும் ரொம்ப பரபரப்பா போட்டுட்டீங்க.
//மனைவியுடன் கருத்து வேறுபாடு : ரஜினி பரபரப்பு பேச்சு///
தலைப்பு "மகா" மட்டரகம் என்று சொல்ல முடியாது. ஆனால், மாலை முரசு படிச்ச ஃபீலிங். ஊரில் இல்லாத குறையை தீர்த்து வைச்சுட்டீங்க. நன்றீ!!!!!!
ஹாஹா.. சில நேரத்துல ரஜினி என்னதான் பேசவரான்னு புரியாது.. அதே மாதிரிதான் இப்ப பேசியிருக்காரு.
தலைப்பை படிக்கும் போதே நெனெச்சேன்.. !! ஏதாவது உள்குத்து இருக்கும்ன்னு.. என்ன நிருபரே !! மொக்கை குத்தா பூட்டுது ?? கும்மாங்குத்தா இல்லியே :((
ஜகர்தா-ஜாலி கர்த்தா - 2 வெளியாயிடுச்சு.. போயி படிங்க... :))
பி.கு :
நிருபரே ! நம்ம முந்தைய கேள்வியை ஞயாபகம் வெச்சிக்குங்க.. உங்களோட புது வலைப்பதிவுல பதில் குடுங்க..
//நிருபரே ! நம்ம முந்தைய கேள்வியை ஞயாபகம் வெச்சிக்குங்க.. உங்களோட புது வலைப்பதிவுல பதில் குடுங்க..//
கண்டிப்பாக கீ-வென். நிருபரின் டைரி தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டதும் டைரி பக்கங்கள் நிரப்பப்படும்.
தலைவர் எப்போதும் கலக்கல் தான்.
தன் நிலை கூற என்றும் தயங்குவதே இல்லை.
கிரி வைத்திருந்த அதே வெப் கவுண்ட்டர் தான் நீங்களும் வச்சிருக்கீங்க போல.. உங்க பதிவ திறந்ததுக்கு 5 நிமிசம் என் கணினி அப்படியே நின்னு போச்சு.. windows installer வந்து எதோ இன்ஸ்டால் செய்யறேன்னுது.. அப்பரம் பாரத் ஸ்டூடண்ட் .காம் ன்னு விளம்பரம் வேற பாப் அப் ஆகுது.. இத சொன்னதுக்கப்பறம் கிரி அவர் பதிவில் வெப் கவுண்ட்டர் தான் பிரச்சனைன்னு எடுத்துட்டார்.. சரி பார்க்கவும்..
பெரும்பாலான பத்திரிகைகள் ரஜினியின் பேச்சை மட்டும் இப்படி அவரது சிலாங்கிலேயே போடுவார்கள். ஏன்னா.. ரஜினி பேசுறதும் வித்தியாசமான ஸ்டைலாத்தான் தெரியும். பின்னூட்டத்துக்கு நன்றி சிரோன் அவர்களே..!
உலகத்துக்கே உபயோகமான ஆனால் ஒருவருக்கும் தெரியாத இந்த தகவலைக் கொடுத்த நிருபர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்
நீங்க நிருபர்னு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்க நிருபர். செய்தியை நல்லாவே எழுதியிருக்கீங்க.
//மாலை முரசு படிச்ச ஃபீலிங். ஊரில் இல்லாத குறையை தீர்த்து வைச்சுட்டீங்க. நன்றீ!!!!!!//
:)))
//கயல்விழி முத்துலெட்சுமி said...
கிரி வைத்திருந்த அதே வெப் கவுண்ட்டர் தான் நீங்களும் வச்சிருக்கீங்க போல.. உங்க பதிவ திறந்ததுக்கு 5 நிமிசம் என் கணினி அப்படியே நின்னு போச்சு.. windows installer வந்து எதோ இன்ஸ்டால் செய்யறேன்னுது.. அப்பரம் பாரத் ஸ்டூடண்ட் .காம் ன்னு விளம்பரம் வேற பாப் அப் ஆகுது.. இத சொன்னதுக்கப்பறம் கிரி அவர் பதிவில் வெப் கவுண்ட்டர் தான் பிரச்சனைன்னு எடுத்துட்டார்.. சரி பார்க்கவும்..//
கயல்விழி முத்துலெட்சுமி அவர்களுக்கு... தாங்கள் கொண்டு வந்த பிரச்சினையை ஒரு பதிவாக வெளியிட்டதன் விளைவாக... நிருபர் வலைப்பூ திறப்பதற்கு தாமதம் ஆனதற்கான விளக்கம் கிடைத்தது. இப்போது அந்த நிரலியை நீக்கி விட்டேன். பிரச்சினையை என் கவனத்துக்கு கொண்டு வந்த தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி கயல்விழி முத்துலெட்சுமி.
வாசகர்களுக்கு நிருபரின் வேண்டுகோள் : இதுபோன்ற பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக எமது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.
// Udhayakumar said...
//மனைவியுடன் கருத்து வேறுபாடு : ரஜினி பரபரப்பு பேச்சு///
தலைப்பு "மகா" மட்டரகம் என்று சொல்ல முடியாது. ஆனால், மாலை முரசு படிச்ச ஃபீலிங். ஊரில் இல்லாத குறையை தீர்த்து வைச்சுட்டீங்க. நன்றீ!!!!!!//
//சென்ஷி said...
//மாலை முரசு படிச்ச ஃபீலிங். ஊரில் இல்லாத குறையை தீர்த்து வைச்சுட்டீங்க. நன்றீ!!!!!!//
ஐயயோ நான் மாலைமுரசு நிருபர் இல்லீங்க...! (ஆனா ஒரு காலத்துல வேலூர் மாலைமுரசில் வேலை பார்த்திருக்றேன். நிருபராக அல்ல.. பூரூப் ரீடராக...!)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!