2008-06-16
ரஜினியின் ரோபோ ஆர்வம் : திரையுலகினர் ஆச்சர்யம்
சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், டைரக்டர் ஷங்கரும் இணைந்து மீண்டும் ஒரு படம் எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து டைரக்டர் ஷங்கர் தனது கனவுத்திட்டமான ரோபோ படத்தை தூசி தட்டி எடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினார். படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்தனர்.
இதற்கிடையில் தனது குரு பாலசந்தருக்காக குசேலன் படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில் கவுரவ தோற்றம் என்கிற நிலையில் துவங்கிய குசேலன் படத்தில், ரஜினியின் பங்கு அதிகரித்து முழுக்க முழுக்க ரஜினி படம் என்கிற தோற்றம் உருவாகி விட்டது. குசேலனின் தன் பங்கு காட்சிகளை குறிப்பிட்ட தேதிகளில் நடித்து முடித்த ரஜினிகாந்த், டப்பிங்கையும் அதே வேகத்தில் முடித்து விட்டார்.
இதையடுத்து அவர் ரோபோ படத்தின் பணிகளில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தை முடித்து விட்டு அந்த படம் வெளிவருவதற்கு முன்பே ரஜினிகாந்த், அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் வியட்நாமில் ரஜினிகாந்த்& ஐஸ்வர்யா ராய் தொடர்பான பாடல் காட்சிகளை எடுக்கும் இடத்தை தேர்வு செய்வதற்காக டைரக்டர் ஷங்கர் வியட்நாம் சென்றுள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலும் சென்றிருக்கிறார். அதே நேரத்தில் ரோபோ படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் பணிகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
Labels:
Robo Rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
தலைவர் படம் பட்டய கிளப்ப என் வாழ்த்துக்கள். தலைவர் சிறப்பு செய்தி போடுங்க நிருபரே :-)
அடுத்த மேட்டர் ஆரம்பிச்சுருச்சு
//கிரி said...
தலைவர் படம் பட்டய கிளப்ப என் வாழ்த்துக்கள். தலைவர் சிறப்பு செய்தி போடுங்க நிருபரே :-)//
போட்டுட்டா போச்சு கிரி...! இனி ரோபோ பற்றிய சிறப்பு செய்திகள் எமது வலைப்பூவில் அணிவகுக்கும்.
//முரளிகண்ணன் said...
அடுத்த மேட்டர் ஆரம்பிச்சுருச்சு//
ஆமாங்க முரளிகண்ணன். இனி எல்லாமே ரோபோ மயம்தானே...!
ரோபோவுல ப்ரியாமணி நடிக்கிறாவல்லா. அவிய ரசினிக்கு சோடியாவா நடிக்கிறாவ?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!