CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-09

ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த தசாவதாரம் டிக்கெட்டுகள்


செனனை நகரில் உள்ள தியேட்டரில் ஒரு வாரத்துக்கான தசாவதாரம் படத்தின் டிக்‌கெட்டுகள் ஒரேநாளில் விற்றுத் தீர்ந்துள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன் பத்து வித்தியாசமான அவதாரம் எடுத்துள்ள படம் தசாவதாரம். பல்வேறு சிக்கல்கள், வழக்குகள், பிரச்னைகளை கடந்து தசாவதாரம் படம் வருகிற 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையிடப்படுகிறது. சென்னை நகரில் மட்டும் தசாவதாரம் படம் 17 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. டிக்கெட் ரிசர்வேசன்‌ நேற்று துவங்கியது. ரிசர்வேசன் துவங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் மளமளவென விற்கத் துவங்கின. பெரும்பாலான தியேட்டர்களில் மதியத்துக்குள் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

சத்யம் தியேட்டரில் அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று விட்டன. இதுபற்றி சத்யம் தியேட்டர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, தசாவதாரம் படம் ஒ‌ரே வாரத்தில் வசூலை வாரி குவித்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் தசாவதாரம் லேட்டாக வந்தாலும் ரசிகர்களின் வரவேற்பு நன்றாகவே இருக்கிறது. படத்தை பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள், என்றார். சென்னை போன்ற ஏ சென்டர்களை தவிர... பி, சி, சென்டர்களிலும் தசாவதாரத்துக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கிறதாம்.

4 comments:

Anonymous said...

adhu sari..kamal sontha selavila ticket vaangi elarukum free t.v kanakka supply panna aarambichutara???

Anonymous said...

kamaloda dasavatharatha patutu naam elarum guna aga vendiyadhu than

முரளிகண்ணன் said...

உதயம் தியேட்டரில் வரும் 11 ஆம் தேதி தான் ரிசர்வேஷன் ஆரம்பிக்கிறார்கள். கமலா, ஏ வி எம் எப்படி என்று தெரியவில்லை. சத்யம், தேவி புல்.

கிரி said...

//தசாவதாரம் படம் ஒ‌ரே வாரத்தில் வசூலை வாரி குவித்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்//

நம்ப முடியலையே..:-?

படம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!