2008-06-26
அசினின் அடுத்த சாதனை : பாலிவுட் பெருமிதம்
தனது பரந்து விரிந்த மனதால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அசின் புயல் தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கிறது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்த பாலிவுட் திரையுலகம், அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறது. இந்தி கஜினியில் நடித்து வரும் அசின் இனி தமிழுக்கு வரமாட்டார் என்று ஒரு கோலிவுட்டில் புரளி கிளம்பியது. ஆனால் அசின் அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
தமிழில் இருந்து இந்திக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்தினார். அந்த வரிசையில் இப்போது சாதனையின் அடுத்த படிக்கல்லில் கால் பதித்திருக்கிறார் நடிகை அசின். சினிமா நட்சத்திரங்கள் மெச்சிக்கு கொள்ளும் வோக் என்ற பத்திரிகையின் இந்த வார பதிப்பு அட்டைப்படத்தில் நடிகை அசினின் படம் வெளியாகியுள்ளது. அதில் அசினைப் பற்றிய டேட்டாக்களும், பேட்டியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த பத்திரிகையில் தங்களது படம் வராதா? என்று பல நடிகைகள் ஏங்கி வரும் நிலையில் தனது படம் அட்டைப்படமாகவே வந்தது ஒரு சாதனையாகவே கருதுகிறார் அசின்.
ம்...! மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்தால் சரிதான்...!
மீண்டும் தமிழ் சினிமா வருவது குறித்து அசின் சினிமா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியை படிக்க இங்கே கிளிக்கவும்.
Labels:
asin
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு செல்லுங்கள் வாசகர்களே..!
இப்பொழுது திருப்தி நிருபரே
மேக்கப் போட்டு ஒரு அழகான பெண்ணை இப்படி கோரமாக்கூட காட்டமுடியுமா என்ன
//சின்ன அம்மிணி said...
மேக்கப் போட்டு ஒரு அழகான பெண்ணை இப்படி கோரமாக்கூட காட்டமுடியுமா என்ன//
:-))))
என்ன குமுதம் போல அசின் புகழ் பாடுகிறீர்கள் !
மூன்றரை அடி உயர அசின் கூட எப்படி கஷ்டப்பட்டு ஹிந்தி கதாநாயகர்கள் டான்ஸ் ஆட போகிறார்களோ !!
ம்ம்ம்ம் இருக்கவே இருக்கு ஸ்டூல் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//இவன் said...
இப்பொழுது திருப்தி நிருபரே//
நன்றி இவன்...!
//சின்ன அம்மிணி said...
மேக்கப் போட்டு ஒரு அழகான பெண்ணை இப்படி கோரமாக்கூட காட்டமுடியுமா என்ன//
வருக சின்ன அம்மிணி... முதன் முறையாக எமது வலைப்பூவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை தெரிவியுங்கள்.
//ARUVAI BASKAR said...
என்ன குமுதம் போல அசின் புகழ் பாடுகிறீர்கள் !//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பாஸ்கர்.
சின்ன அம்மிணி கருத்துக்கு...ரீபிட்டே
//னது பரந்து விரிந்த மனதால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அசின் ///
நிருபரே, என்ன சொல்ல வரீங்க? எதுல/எங்க பார்த்தீங்க அவங்க பரந்து விரிந்த மனசை?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!