2008-06-29
தப்பு மாளவிகா மேலதான்: நடிகர் சங்கம் தீர்ப்பு
செக்ஸ் டார்ச்சர் புகார் விவகாரத்தில் மாளவிகா மீதுதான் தவறு இருப்பதாக நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாளவிகா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டார் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு.
கார்த்தீகை பட சூட்டிங்கின்போது தன்னிடம் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, நான் ஒரு கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறி நடிகை மாளவிகா அதிரடி செக்ஸ் டார்ச்சர் புகார் செய்தார். இதனை மறுத்த கார்த்தீகை பட குழுவினர், மாளவிகாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு நடிகையை தேடி வருகிறது.
இந்நிலையில் மாளவிகா முழுக்க முழுக்க நம்பியிருந்த நடிகர் சங்கமும் அவரை கைகழுவி விட்டது. இதனால் வேதனையில் இருக்கிறார் அவர். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் போனில் மாளவிகாவிடம் பேசினார். அப்போது, இன்னும் 10 நாட்கள் நடித்து கொடுத்தால் யாருக்கும் நஷ்டம் இல்லாமல் போய்விடும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சமாதானத்தை மாளவிகா ஏற்றுக் கொள்ளவில்லை. விடாப்பிடியாக படத்தில் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பின்னர் சூட்டிங்கின்போது என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணை தொடங்கியது. விசாரணையில் மாளவிகா மீதுதான் தப்பு என்று தெரியவந்தது. இதையடுத்து நடிகர் சங்கத்தில் இருந்து மாளவிகாவுக்கு சப்போர்ட் கொடுப்பதில்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் நடவடிக்கையில் தலையிடுவதில்லை என்றும் சரத்குமார் அறிவித்து விட்டார்.
இதையடுத்து மாளவிகா கொஞ்சம் கலக்கத்துடனேயே இருக்கிறார். இதுபற்றி கேட்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மாளவிகா மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, டைரக்டர் வீரா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
Labels:
Malavika
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நடிகர் சங்கத்தின் முடிவு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு :-)))
தப்புன்னா... யாரா இருந்தா என்னங்க... தண்டனை கொடுக்க வேண்டியது தான்.
படப்பிடிப்பின் போது.. கேரவனில்.. மாளவிகாவும் தயாரிப்பாளரும் தனியாக இருந்த போது நடந்தது என்று வந்த புகாரின் மேல்.. எப்படி இப்படி ஒரு விசாரணையில்.. மாளவிகா மீது தவறென்று கண்டுபிடிக்கப்பட்டது...
தீர்ப்பென்னவோ.. ஒருதலைப் பட்சமாகத் தெரிகிறது..
"நாட்டாமை... தீர்ப்பை மாத்து...."
சீமாச்சு
கிரி, சீமாச்சு கருத்த நான் வழிமொழியறேன்.
-மாளு ரசிகன்
மாளவிகா மேல தப்புன்னா... நடவடிக்க எடுக்கறதுல தப்பே இல்லங்க.
//கிரி said...
நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு :-)))
தப்புன்னா... யாரா இருந்தா என்னங்க... தண்டனை கொடுக்க வேண்டியது தான்.//
REPEETTUUUUUUU
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!