2008-06-26
குசேலனில் ரஜினிக்கு பால் அபிஷேகம்
குசேலன் படத்தில் ரஜினி கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகவே நடித்து வரும் படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவும் நடிகையாகவே நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன.
சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் ரஜினிகாந்த் படத்தை அவரது ரசிகர்கள் பார்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியின்போதே சாந்தி தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் கட்&அவுட்டுக்கு படத்தில் ரசிகர்களாக நடிக்கும் உண்மையான ரசிகர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதுவும் படமாக்கப்பட்டது. தியேட்டர் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்து ஆங்கிலத்தில் வரும்போதும், சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும்போதும் ரசிகர்கள் திரையின் முன்பு சூடம் காண்பித்து, விசில் அடித்து அலம்பல் செய்வது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இதுபற்றி டைரக்டர் வாசு கூறுகையில், ரஜினிகாந்துக்கு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறவிருக்கிறது. குசேலன் ரீலிஸ் ஆன பிறகு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் அமர்ந்து படம் பார்க்க விரும்புகிறார், என்றார்.
சாந்தி தியேட்டரில் எடுக்கப்பட்ட காட்சிகள் குசேலனின் ஹெலைட் பாட்டான சினிமா... சினிமா... சினிமாதான் என்ற பாடலில் இடம் பெறும் என்பது கொசுறு தகவல்.
Labels:
Kuselan,
meena,
Nayanthara,
pasupathi,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
natri nirubar
தலைவர் சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க.. தலைவர் செய்திய நல்லா போடும் நிருபரும் வாழ்க வாழ்க. குசேலன் படம் வாழ்க வாழ்க
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!